'குட்டி' வாரிசு இன்பநிதிக்கு ராஜ மரியாதை... ஜல்லிக்கட்டுக்காக போராடி தீர்ப்பில் வெற்றி பெற்றுத் தந்தவருக்கு அவமரியாதையா..?
வயதில் மூத்தவரான அவரை நிற்க வைத்து கலைஞரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இன்பநிதியை அமர வைத்து பார்ப்பது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் சமூக நீதி.
மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதியிடம் ‘பவ்யம்’ காட்டிய அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், அதே ‘பவ்யம்’, ‘மரியாதை’யை இன்பநிதியிடம் காட்டினர். ஏற்கெனவே, சமீப காலமாக சில திமுக கட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் தந்தை உதயநிதியுடன் இன்பநிதி தலைகாட்டி வருகிறார். இன்பநிதியை கட்சியின் அடுத்த தலைமுறையாக அரசியலில் ஈடுபடுவதற்கான வெள்ளோட்டமாகவே, உதயநிதி மகனை சமீபகாலமாக இதுபோன்ற பொதுவெளி நிகழ்ச்சிகளில் அழைத்து வருவதாக திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் ஆதரவும், அரசியல் வட்டாரத்திலும் விமர்சனமும் எழுந்து வருகிறது. மேலும், அரசியலில் ஈடுபடுவதற்கு முன் மகன் இன்பநிதியை முதற்கட்டமாக கட்சி நிர்வாகிளிடமும் அறிமுகப்படுத்துவதற்காகவும் உதயநிதி தன்னுடன் அழைத்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த உதயநிதி, இன்பநிதி ஒன்றாக விழா மேடையில் சேர்ந்திருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பதிவிட்டு ‘திமுகவில் அடுத்த தலைமுறை உதயம்’ என பதிவிட்டு வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ‘இன்பநிதி’ வருகை திமுகவில் மட்டுமில்லாது அரசியல் வட்டாரத்தில் ‘கவனம்’ பெற ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு வரலாற்றில் உச்சநீதி மன்றம் சென்று போராடி வழக்காடி வெற்றி தீர்ப்பு பெற்ற ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகர் அவர்களை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தில், வயதில் மூத்தவரான அவரை நிற்க வைத்து கலைஞரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இன்பநிதியை அமர வைத்து பார்ப்பது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் சமூக நீதி.
இதையும் படிங்க: குட்டி தளபதியின் பேண்டில் தூசி தட்டிய அமைச்சர்… இன்பநிதியின் நண்பர்களுக்காக உதயநிதி முன் அசிங்கப்பட்ட பெண் கலெக்டர்..?
அமைச்சர் மூர்த்தி: ஏம்மா பச்ச சேலை, பின்னால போ.... இன்பநிதி சார் பிரண்ட்ஸ் எல்லாம் எங்க உட்காரனும்... பட்ச சேலை கட்டிய பெண்மணி ஜல்லிக்கட்டு போட்டியை அரசின் சார்பாக நடத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜல்லிக்கட்டு தடைக்கு மூலகாரணமான திமுககாரர்கள் எல்லாம் முன்வரிசையில் உட்கார, அந்த தடையை நீக்க வெயில் மழை என பல மாதங்களாக நின்று சட்டப்போராட்டம் நடத்திய ராஜசேகரனை பின்னாடி நிற்கவைத்து அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இது தவறு என்ன பதவியில், அதிகாரத்தில் இருந்தாலும் வயதில் மூத்தவர் என்று அடிப்படையில் அவருக்கு மரியாதை கொடுப்பதுதான் பண்பாடு உதயநிதிக்காவது அடிப்படை அறிவு வேண்டும்.
காந்தி மூலமாகவோ நேரு-இந்திரா காந்தி - ராஜிவ் காந்தி- சோனியா காந்தி - ராகுல் காந்தி என்று இருந்த காங்கிரஸ் கூட சற்று மாறுபட்டு மல்லிகார்ஜூன கார்கே அவர்களை கட்சியின் தலைமை பொறுப்பிற்க்கு கொண்டு வந்துள்ளது. எம்ஜிஆர் மூலமாகவோ கலைஞர் ஆனால் இவர்கள் சமூகநீதி சமத்துவம் பெரியார் கொள்கை என்று மக்களை ஏமாற்றி விட்டு ஒரு கம்பெனி போல குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கட்சியிலும் ஆட்சியிலும் வைத்துள்ளார்கள். இதை சிந்திக்காமல் ஸ்டாலின் திமுகவில செயல்படுவர்கள் சுயமரியாதை- தனமானம் என கதறபோவதும் இல்லை பதறபோவதும் இல்லை. இவர்கள் hero worship என்று புகழ் பாடும் கூட்டம். இவர்கள் திருவள்ளுவர்-பெரியார் பற்றி பேச என உரிமை உள்ளது?'' என அரசியல் விமர்சகரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாகச்ாடுள்ளார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் ஜாதி..? திமுக அமைச்சருக்கு எதிராக கொம்பு சீவும் இயக்குநர் ப.ரஞ்சித்...தோழமையும் சுட்டாத திருமா..!