×
 

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் மோதல்..! பாஜக - தமிழ் தேசிய முன்னணியினர் இடையே தள்ளுமுள்ளு..!

சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக - தமிழ் தேசிய முன்னணியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி அவரது திருவருவ சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற இடத்தில் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்டம் மறவனேரியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இடத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு காத்திருந்த பாஜகவினரை பார்த்து எதிர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இரு தரப்பினரையும் போலீசார் கட்டுப்படுத்த முயற்சித்த நிலையிலும் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பினருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கைலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரையும் கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படிங்க: இது என்.டி.ஏ கூட்டணி இல்ல!!எடப்பாடி கூட்டணி..! அல்லு கிளப்பும் அதிமுக ஆதரவாளர்கள்

மேலும் எதிர்கோஷம் எழுப்பியவர்களை பாஜகவினர் தாக்கம் முயன்ற நிலையில், தமிழ் முன்னணியினரை போலீசார் வேறு வழியில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: 5 ஆண்டுகள் தாலி கட்டிக்கொண்ட திமுக... அதிமுகவுக்கு 2 மாத அட்ஜெஸ்ட்மெண்ட்தான்: பழ.கருப்பையா பொளேர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share