செங்கோட்டையனை ரகசியமாக சந்தித்த அந்த முக்கியப்புள்ளி... பேரத்தைத் தொடங்கியதா டெல்லி..?
எங்களது அண்ணன் செங்கோட்டையன் அந்த காலத்தில் எம்.எல்.ஏ-வாகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி சிலுவம்பாளையம் கிளைச் செயலாளராக இருந்தார்.
செங்கோட்டையன் அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தின் எடப்பாடி பழனிச்சாமியின் பாராட்டு விழாவிற்கு செல்லாமல் இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. இதுகுறித்து கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுக சீனியர்கள் கூறும்போது,''எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்கள் பேனரில் இல்லை. அது செங்கூட்டையனுக்கு வறுத்தம்.அதை அவரே சொல்லி விட்டார். முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி தன்னை முன்னிலைப்படுத்தியே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். எனவே தங்களை ஆளாக்கி வளர்த்து விட்ட தலைவர்களுடைய படங்கள் இல்லாத நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்பது? என அவர் வெளிப்படையாகவே எழுப்பி இருக்கிறார்.
மூன்று நான்கு தினங்களுக்கு முன்பு தான் செங்கோட்டையனுக்கு இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்தபோது எஸ்.பி.வேலுமணி பெயருக்கு கீழ் தான் கட்சியின் மூத்தவர், முன்னாள் அமைச்சர், கட்சியினுடைய மிக மிக முக்கியமான முகங்களில் ஒருவர். அதிமுக உருவாக்கப்பட்ட நாள் முதலே அக்கட்சியில் இருந்து வரக்கூடியவர். எம்.ஜி.ஆர் காலம் தொட்டே கட்சியில் பயணிக்க கூடியவர் செங்கோட்டையன். அவருடைய பெயர் எஸ்.பி.வேலுமணி பெயருக்கு கீழ் போட்டுள்ளது செங்கோட்டையனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுதி இருக்கிறது.
இதையும் படிங்க: எடப்பாடியாருடன் மோதல்… செங்கோட்டையனுக்கு செம டிமாண்ட்: திமுக- தவெக இடையே கடும்போட்டி..!
அது மட்டும் இல்லாமல் அந்த அழைப்பிதழில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம், அதற்கு கீழே எஸ்.பி.வேலுமணி புகைப்படம், அடுத்தே செங்கோட்டையனின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. எனவே ஒரு மூத்த நிர்வாகியான தன்னை அவமானப்படுத்துவதாக செங்கோட்டையன் உணர்ந்தார். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் இதுகுறித்து கூறும்போது, ''எங்களது அண்ணன் செங்கோட்டையன் அந்த காலத்தில் எம்.எல்.ஏ-வாகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி சிலுவம்பாளையம் கிளைச் செயலாளராக இருந்தார். செங்கோட்டையன் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பை கொடுத்தவர்.
இப்போது அவரை ஓரம்கட்டி விட்டு மூன்றாம் கட்ட, நான்காம் கட்டமாக உட்கார வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது எந்த வகையில் நியாயம்? அதேபோல் அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெறக்கூடிய எந்தக் கூட்டமாக இருந்தாலும் மேடையில் செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிச்சாமி இடம் கொடுப்பதில்லை. எடப்பாடி பழனிச்சாமி அருகே மேடையில் 10 முதல் 15 பேர் உட்கார்ந்திருப்பார்கள். அந்த 10, 15 பேரில் கூட ஒருவராக மேடையில் ஏற்றி செங்கோட்டையனை அமர விடுவதில்லை. எதிரே தரையில் போடப்பட்டுள்ள இருக்கையில் அமர வைத்து தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்தனர். சில நேரங்களில் இரண்டாவது வரிசை, மூன்றாவது வரிசையில் கூட அமர வைக்கப்பட்டார்.
கட்சியினுடைய மூத்த நிர்வாகியான அவருக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் எப்படி? அதே போல் செங்கோட்டையனுக்கு எந்த ஒரு விழாவாக இருந்தாலும் மரியாதை கொடுக்கப்படவில்லை.தொடர்ச்சியாக அவர் புறக்கணிக்கப்பட்ட வருகிறார். அவர் ஒரு மூத்த முன்னாள் அமைச்சர், மூத்த நிர்வாகி. இப்போது இருப்பவர்களுக்கெல்லாம் கட்சியில் பதவி வாங்கி கொடுத்தவர்.
அடுத்து அதிமுகவின், அண்ணா தொழிற்சங்கத்தில் பொறுப்புகள் போடப்பட்டு வந்தது. குறிப்பாக போக்குவரத்து தொழிற்சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பொறுப்புகள் போடப்பட்டு வந்தன. அதற்கு புதிய நபர்களை பரிந்துரை செய்து பதவி கொடுக்கப்பட்டு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தில் பொறுப்புகள் போடப்பட்டதில் செங்கோட்டையன் சிலருக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அவர் பரிந்துரைத்தவர்களுக்கு பதவி அளிக்காமல், எஸ்.பி. வேலுமணி, முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கொடுத்த பரிந்துரைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு பதவி கொடுத்ததும் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையெல்லாம் மனதில் போட்டு குமுறிக் கொண்டிருந்தார் செங்கோட்டையன். இப்போது மொத்தமாக வெடித்து விட்டார்'' என்கிறார்கள்.
ஆனால், செங்கோட்டையனின் வெடிப்புக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. 'செங்கோட்டையன், வெளிப்படையாக எடப்பாடியுடன் மோதுவது எதிர்கட்சிகளுக்கு பெரிதும் ஆர்வ மூட்டக்கூடிய செய்திதான். இயல்பில் செங்கோட்டையன் மென்மையானவர்.அதாவது சுலபத்தில் பந்தயத்திலிருந்து விலகிக் கொள்ள கூடியவர். ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான போதுகூட, அவர் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. அதைவிட முக்கியம் தன் மென்மைப்போக்கால் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, எல்லோருடனும் அமைதியாக வேலை பார்த்தவர்.
ஆனால், எதிர்ப்பக்கம் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது இருப்புக்காக யார் ஒருவரையும் அரசியல் ரீதியாக காலி செய்யத் தயங்காதவர். ஓ.பி.எஸ், டிடிவி இருவரையும் சேர்த்துக் கொள்ள பாஜக கொடுத்த கடும் அழுத்தத்தை நிராகரித்தார். அதற்கான எந்த விலைக்கும் அவர் தயாராக இருந்தார். சசிகலாவுக்கு எத்தனை தூரம் பணிவு காட்டினாரோ, அதற்கு இணையான தீவிரத்தோடு அலட்சியம் காட்டியவர்.
சொந்தக் கட்சி அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக ஒழிப்பதில் தயக்கம் காட்டாத எடப்பாடியோடு சரணாகதியையே அரசியல் உத்தியாக வைத்திருக்கும் செங்கோட்டையன் சண்டைக்குத் தயார் என சிக்னல் கொடுக்கிறார் என்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கருத வேண்டும். செங்கோட்டையன் இப்படி பேசும் அளவுக்கு எடப்பாடி என்ன செய்தார் அல்லது எடப்பாடியோடு மோதும் அளவுக்கு செங்கோட்டையனுக்கு சப்போர்ட் எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான் இதில் தீர்க்கப்பட வேண்டிய புதிர். பிப்ரவரி 9 ஆம் தேதி நாமக்கல்லில் செங்கோட்டையன் ரகசியமாக சந்தித்த பிரமுகர் யார் என்று தெரிந்தால் புதிர் அவிழக் கூடும். ஆக, அதிமுகவுடன் சீட் பேரத்தைத் தொடங்கிவிட்டது டெல்லி'' என்று பொடி வைத்து பேசுகிறார் மற்றொரு அதிமுக நிர்வாகி.
இதையும் படிங்க: இது அதிமுக நிகழ்ச்சி அல்ல... செங்கோட்டையனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிவடி....!