அம்மாவின் ஆன்மா எடப்பாடியாரை மன்னிக்காது... கடுமையாக சபித்த கருணாஸ்..!
இந்த மண் இருக்கும் வரை மக்கள் எதைவேண்டுமானாலும் மன்னித்துவிடுவார்கள். ஆனால், இந்த நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கவே மாட்டார்கள்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், எடப்பாடி- டிரம்புடன் கூட்டணி வைத்தால் கூட டெபாசிட் வாங்கமாட்டார் என விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ''அதிமுக- பாஜவுடன் வைத்த கூட்டணிக்கு காரணமே அவர்கள் செய்த ஊழல்கள் போன்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. என்னையும் அந்த கட்சியில் சேர்த்துக்கொள்ள விலை பேச வந்தார்கள். இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்.
உண்மையில், 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லை. டெபாசிட் கூட வாங்காது. எடப்பாடி கூட நீங்கள் டிரம்ப் கூட்டணி அமைத்தால் கூட டெபாசிட் வாங்கமாட்டார். அந்த கட்சி இல்லாமல் உண்மையில் காலியாகிவிடும். இதனை நான் வருத்தப்பட்டு தான் சொல்கிறேன். அம்மா இருக்கும் வரை அதிமுக வேற மாதிரி இருந்தது. நான் இரட்டலையில் நின்று வெற்றிபெற்று தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.
இதையும் படிங்க: டி.டி.வி.தினகரனை நெருங்கும் எடப்பாடியார்... அதிமுக மீது நொறுங்கும் பாஜகவின் நம்பிக்கை..!
உண்மையில் அம்மா வேற லெவல். அவரை நான் பெண் தெய்வம் என்று தான் சொல்வேன். ஆனால், இப்போது அங்கு இருப்பவர்கள் அம்மாவுக்கு தூரோகம் செய்தவர்கள்தான். சத்தியமாக சொல்கிறேன் அம்மாவுடைய ஆத்மா கூட எடப்பாடியை மன்னிக்காது. என்னை மன்னித்துவிடும் என்றென்றால் நான் உண்மையாக அந்த கட்சிக்கு இருந்தேன். அம்மா உயிரை கொடுத்து வாங்கிய ஆட்சி களைந்துவிட கூடாது என நான் தொடர்ச்சியாகவே கட்சியில் இருந்தேன்.
கடைசி வரை அசிங்க பட்டுக்கொண்டு தான் இருந்தேன். என்னுடைய தொகுதிமக்களுக்கு எதுவும் செய்யவில்லை என வருத்தப்பட்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது. இந்த மண் இருக்கும் வரை மக்கள் எதைவேண்டுமானாலும் மன்னித்துவிடுவார்கள். ஆனால், இந்த நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கவே மாட்டார்கள். இந்த நேரத்தில் நான் சவால் விடுகிறேன் முடிஞ்சா எதிர்க்கட்சி தலைவர் ஆகிரு பார்ப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல; கட்டிடத்தையே இடித்து கட்டுகிறவன்... சீமான் ஆவேசம்!!