இந்தியா வரியை குறைத்தாலும் நான் குறைக்க மாட்டேன்... உச்சக்கட்ட பிடிவாதத்தில் டிரம்ப்!!
வரியை குறைத்தாலும் இந்தியா மீது கண்டிப்பாக வரி விதிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப பதவியேற்ற நாள் முதல் அவர் எடுத்த அதிரடி முடிவுகளால் பல நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வரி விவகாரத்தில் அவரது முடிவு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதாவது அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் என கூறப்படுகிறது.
இதேபோல் மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் அவர் விதித்துள்ளார். இதுமட்டுமின்றி, அமெரிக்கா மீதான கட்டணங்களை இந்தியர்கள் குறைக்கப் போகிறார்கள் என்று தான் நம்புவதாகவும் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம், அதற்குள் வரியை குறைக்காத நாடுகள் மீது தாங்கள் கண்டிப்பாக கடுமையான வரிகளை விதிப்போம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இந்தியா தங்களிடம் தற்போது வசூலிக்கும் அதே கட்டணத்தை தாங்களும் இந்தியாவிடம் வசூலிக்கப்போவதாக கூறிய டிரம்ப், இந்தியா வரியை குறைத்தாலும் குறைக்கவிட்டாலும் தாங்கள் இந்தியாவை விட மாட்டோம் என்றும் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிக்கப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாடு கடத்தும் வழக்கு... இந்திய வழக்கறிஞரை நம்பியிருக்கும் டிரம்ப்... யார் இவர்?
இதனிடையே மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் கணிப்பில், அமெரிக்காவின் இந்த வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் இதனால் 4 சதவிகிதம் ஏற்றுமதி சரிந்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் மட்டும் சுமார் 7 பில்லியன் டாலர் சரிவு இந்தியாவிற்கு ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க இந்தியா ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள் , எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 1 மணி நேரம் காக்க வைத்து அவமானப்படுத்திய புடின்... டிரம்பை விரக்தியாக்க ரஷ்ய அதிபரின் ராஜதந்திரம்..?