×
 

117 மாவட்ட செயலாளர்கள்...முதல் பட்டியலில் 25 பேர் அறிவிப்பு...விஜய் ஆசி...பட்டியல் இதுவா?

தவெக கட்சி தொடங்கி முதன்முறையாக 25 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை விஜய் முன் வெளியாகிறது. 25 பேரும் விஜய்யை சந்தித்து பேசுகின்றனர். இதில் சில செயலாளர்கள் பட்டியல் கசிந்துள்ளது.

தமிழக அரசியலில் முன்னணி நட்சத்திரமாக வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் பிஸ்னெஸ் செய்யப்படும் இடத்தில் உள்ள முன்னணி நடிகர் விஜய் தன் படவாய்ப்பை துறந்து அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். கடைசி படத்தை முடித்துக்கொடுத்து விட்டு நேரடி அரசியலில் குதிப்பேன் என அறிவித்தார். 

கட்சி ஆரம்பித்து, கொடி, பெயர் அறிமுகம், அக்.27 கட்சி மாநாடு அதில் கட்சியின் கொள்கை, தீர்மானம் பிரகடனம், விஜய்யின் 45 நிமிட ஆவேச உரை தமிழகத்தில் அடுத்த 2 மாதத்திற்கு அதுதான் பேசுபொருளாக இருந்தது. விஜய் கட்சி ஆரம்பித்து தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்து விட்டு படபிடிப்புக்கு சென்றப்பின் கல்யாணம் முடிந்து காலி செய்யப்பட்ட மண்டபம் போல் ஆனது கட்சி. 

இதையும் படிங்க: விஜய் கையில் கிடைத்த முக்கிய கடிதம்...’அவங்களை வெயிட் பண்ண சொல்லுங்க’ உடனடியாக பறந்த சிக்னல்...

மயான அமைதியாக அசைவார் இன்றி கட்சி இருந்தது. அவ்வப்போது அறிக்கை வரும், பனையூர் அரசியல் என கிண்டலடித்தாலும் அதை மீற நிர்வாகிகளுக்கு துணிவில்லை. அனைவரும் பாயிண்ட் வரட்டும் என்பதுபோல் விஜய் வரட்டும் என காத்திருந்தனர், கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் டிவி டிபேட்டுகளில் சண்டைபோட்டு கட்சிக்கு உயிர் இருக்கிறது என காட்டிக்கொண்டனர். 

ஆனாலும் மாற்றம் இல்லாத நிலையில் 2 ஆடியோக்கள் வெளியானது. ஆடியோ வெளியான கோபத்தில் விஜய் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை. அதன் பின்னர் 3 மாதம் ஆகியும் குறைந்தப்பட்சம் மா.செ. நியமனம் கூட இல்லை என்ற கேள்வி எழுந்த நிலையில் உடனடியாக பட்டியலை தயார் செய்ய சொன்னார் விஜய்.


2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்கிற மெகா திட்டம் போட்டு 117 மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவெடுத்து முதற்கட்டமாக 25 மா.செக்கள் பட்டியலை இறுதிப்படுத்தியுள்ளார் புஸ்ஸி. இதற்குள் நாக்கு தள்ளி போயுள்ளது. இன்னும் 117 மாவட்ட செயலாளர்களை  பரந்தூர் பயணமானார் விஜய். பின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் ரெடியானதால் விஜய் முன்னிலையில் பட்டியல் அறிவிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்களை விஜய்யை சந்திக்க வைக்கும் ஏற்பாடு நடக்க உள்ளது. 

முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 25 மாவட்ட செயலாளர்கள் பெயர்களில் பெரும்பாலும் சாதாரண விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என்கிற தகவல் கசிந்துள்ளது. இவர்கள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்கிற பட்டியல் நமக்கு கிடைத்துள்ளது. அதில் சென்னை மாவட்ட செயலாளர்கள் சிலரும், மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் பெயர்கள் இருக்கலாம் என தவெக தரப்பிலிருந்து நமக்கு கசிந்துள்ளது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு. இவர்கள் முதல் பட்டியலில் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்த பட்டியலில் வரலாம்.

1. விருகம்பாக்கம்- அண்ணா 
2. தி.நகர் - அப்புனு 
3.அம்பத்தூர் - பாலமுருகன் 
4. பூக்கடை - குமார் 
5.இசிஆர் - சரவணன் 
6. திருவொற்றியூர் - நவீன்
 7. மதுரை - விஜய் அன்பன்
 8. நெல்லை - சாஜி
9. தூத்துக்குடி - ஆக்னஸ்
( இவர் பில்லா ஜெகன் சகோதரி அன்றே நேரடியாக விஜய்யை சந்தித்து ஆசிப்பெற்று தன் இருப்பையும் உறுதிப்படுத்திக்கொண்டார் என தகவல்)

இதையும் படிங்க: ராகுல்காந்தி விஜய்க்கு கொடுத்த கிரீன் சிக்னல்...மகிழ்ச்சியில் காங்கிரஸ்...செல்வப்பெருந்தகை பேச்சின் பின்னணி இதுதானா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share