×
 

 “ஒரு துண்டு சீட்டு கொடுக்க முடியல” - தவெக புள்ளைங்கோவுக்காக பொங்கிய விஜய்! 

அரசியலில் தன் மீதான விமர்சனங்களை தவிடுபொடியாக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக்குழுவினர் மத்தியில் உரையாற்றியுள்ளார்.

அரசியலில் தன் மீதான விமர்சனங்களை தவிடுபொடியாக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக்குழுவினர் மத்தியில் உரையாற்றியுள்ளார். 

அரசியலில் வொர்க் ப்ரம் ஹோம் செய்கிறார், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை பனையூர் வெற்றிக் கழகம் என மாற்றிவிடலாம் என்றெல்லாம் தன்னைக் குறித்து வந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கள அரசியலை பரந்தூரில் இருந்து தொடங்கியிருக்கிறார்.

கள அரசியல் தொடக்கம்: 

இதுகுறித்து பரந்தூர் மக்களிடையே உரையாற்றிய விஜய், “இந்த நாட்டிற்கு விவசாயிகள் தான் மிகவும் முக்கியமானவர்கள். அதனால் தான் உங்கள மாதிரி விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத் தான் எனது பயணத்தை தொடங்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு இதுதான் சரியான இடம் என எனக்குத் தோன்றியது. என்னுடைய கள அரசியல் பயணம் உங்களுடைய ஆசீர்வாதத்துடன் இங்கிருந்து தான் தொடங்குகிறது” என்றார். 

இதையும் படிங்க: 'நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள்தான் கில்லாடி ஆச்சே...' திமுகவை அட்டாக் செய்த விஜய்..!

சட்டப்போராட்டம் நடத்துவேன்: 


தொடர்ந்து பேசிய அவர், “கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக இந்த மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். இந்த் அபோராட்டம் குறித்து ராகுல் என்ற சிறுவன் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அது என்னை ஏதோ செய்துவிட்டது. அதன் பின்னர் தான் உங்களுக்காக நிற்க வேண்டும் என முடிவெடுத்தேன். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் இயற்கைக்கு தீங்கிழைக்காத பகுதி சார் மாநில பரவலாக்கம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினேன். இதை நான் இங்கு பேசக்காரணம் ஓட்டு அரசியலுக்காக இல்லை.   அதேபோல் விவசாய நிலங்களை பாதுகாப்பது தொடர்பான தீர்மானத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகளை அழிச்சி சென்னையை நிரந்தர வெள்ளக்காடாகும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தேன். அதுமட்டுமில்லாமல் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் விவசாயிகளை பாதிக்ககூடிய திட்டத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டேன் என்றார். மேலும் இந்த பிரச்சனையில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன் என்றார். 

உங்கள் வீட்டு பிள்ளை: 

விமான நிலையத்திட்டத்திற்காக ஆய்வு செய்த நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுகொ கொள்வதாகவும், விவசாய நிலமற்ற அல்லது பாதிப்பு குறைவான நிலங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உங்களுக்காகவும் உங்கள் ஊருக்காகவும் இனி உங்கள் வீட்டு பிள்ளையான நானும், தமிழக வெற்றிக் கழகத்துடைய தோழர்களும் சட்டத்திற்குட்பட்டு அனைத்து வழிகளிலும் துணை நிற்போம் என்றார். 

நோட்டீஸ் கொடுக்கத் தடை: 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ப புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததுக்கு தடை விதிச்சாங்க. ஒரு துண்டு சீட்டு நம்ப புள்ளைங்க கொடுத்ததுக்கு தடை விதித்தார்கள், அது ஏன் என எனக்குத் தெரியவில்லை. நல்லதே நடக்கும் உறுதியுடன் இருங்கள். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என தனது உரையை நிறைவு செய்தார் 
 

இதையும் படிங்க: பரந்தூர் விசிட்... முதல் போராட்டக் களத்தில் விஜய்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share