போலீசாருடன் தவெகவினர் வாக்குவாதம் - உச்சக்கட்ட பரபரப்பில் பரந்தூர்!
பரந்தூர் போராட்டக்குழுவினருடன் விஜய் சந்திப்பிற்கு செல்ல முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பரந்தூர் போராட்டக்குழுவினருடன் விஜய் சந்திப்பிற்கு செல்ல முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2வது விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. இதற்காக சுமார் 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வளத்தூர்,அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பரந்தூர் போராட்டக்குழுவைச் சந்திக்க உள்ளார். இதன்மூலம் பரந்தூர் விவகாரம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. பரந்தூரில் விஜய் சந்திப்புக்கு அனுமதி மறுத்தால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது காவல்துறை.
இதையும் படிங்க: பரந்தூர் செல்லும் விஜய் இதை செய்வாரா?... தொண்டர்கள் எதிர்பார்ப்பு
பரந்தூரில் வசிக்கும் மக்களை மட்டுமே விஜய் சந்திக்க அனுமதி, மண்டபத்துக்குள் நெரிசல் ஏற்படக்கூடாது, குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்றெல்லாம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பரந்தூரில் உள்ள வீனஸ் வெட்டிங் ரிசார்டில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். பரந்தூரில் உள்ள ரிசார்ட்க்கு வருகை தரும் தவெக நிர்வாகிகளை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, விஜய் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவார்கள் என காவல்துறை கட்டுப்பாடு விதித்திருந்தது. வேறு மாவட்டங்களில் வரும் தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீசார் கண்ணன்தாங்கல் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். தென் சென்னையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
“வாகனங்களில் அனுமதிக்காவிட்டால், நடந்து செல்லவாவது அனுமதி தாருங்கள்” “நடந்து செல்லக்கூடாது காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமா?” என போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்காமல் அங்கிருந்து செல்லமாட்டோம் எனக்கூறி போலீசாருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: 'கூட்டணிக்குள் வாங்க’, விஜய்யை அழைத்த செல்வபெருந்தகை... கடுப்பில் திமுக...பின்னனி என்ன?