×
 

பரந்தூர் செல்லும் விஜய் இதை செய்வாரா?... தொண்டர்கள் எதிர்பார்ப்பு

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அரசு முயற்சிக்க தங்களது  விவசாய நிலத்தை காக்க 900 நாட்களாக போராடி வரும் பரந்தூர் மக்களை சந்தித்து குறைகேட்கும் தவெக தலைவர் விஜய் சந்திப்பு சம்பிரதாயமான சந்திப்பாக அமையுமா? அடுத்த நடவடிக்கை என்ன என்பதை விஜய் சொல்வாரா?

கட்சியில் ஏற்பட்ட தேக்கத்தை போக்கவும், கட்சி தொண்டர்களுக்கு ஆடியோ விவகாரத்தில் ஏற்பட்ட சோர்வை போக்கவும் விஜய்யின் பொதுமக்கள் சந்திப்பு மூலம் ஒரு தேக்கத்தை உடைக்கலாம் என்று தமிழகத்தில் 3 பிரதான இடங்களில் மக்கள் சந்திப்பை விஜய் நடத்த உத்தேசித்து முதற்கட்டமாக பரந்தூரில் போராடி வரும் மக்களை சந்திக்க உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சீமான், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர்  சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் தவெக இணைய வேண்டும்...

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் இன்று சந்திக்க உள்ளார். இதன்மூலம் பரந்தூர் விவகாரம் கூடுதல் கவனம் பெறுகிறது. பரந்தூரில் விஜய் சந்திப்புக்கு அனுமதி மறுத்தால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது காவல்துறை.

பரந்தூரில் வசிக்கும் மக்களை மட்டுமே விஜய் சந்திக்க அனுமதி, மண்டபத்துக்குள் நெரிசல் ஏற்படக்கூடாது, குறிப்பிட்ட நேரம் மட்டுமே என்றெல்லாம் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று நிதி அமைச்சர் பரந்தூர் விமான நிலையம் ஏன் தேவை என்று பேட்டி அளிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது விஜய் சந்திப்பு.

விஜய் பரந்தூருக்கு சென்று மக்களை சந்திப்பது சடங்குபூர்வமான ஒரு நிகழ்வாக இருந்து விடக்கூடாது மக்களிடம் உரையாடும் விஜய் அம்மக்களுக்காக தொடர்ந்து உடனிருப்பார் என்பதை உறுதிப்படுத்துவாரா? என்பது பரந்தூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

அக்.27 மாநாட்டுக்கு பிறகு புத்தக வெளியீட்டு உள் அரங்க நிகழ்வுக்கு பின் பொதுவெளிக்கு வரும் விஜய் பரந்தூர் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து தனது கட்சியின் நிலை, தமிழகத்தில் மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் தனது மெசேஜை பகீரங்கமாக தெரிவிக்கவேண்டும். பேட்டி அளிக்க தயங்காமல் விஜய் பேசினால் அது தவெக தொண்டர்களுக்கு பூஸ்ட்டாக அமையும் விஜய் இதை செய்வாரா?
 

இதையும் படிங்க: ’பாடி கட்டாத லாரியில் லோடு ஏற்ற முடியுமா’? - விஜய் முன் உள்ள சிக்கல்...தப்ப முடியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share