கொங்கு மண்டலத்தில் கால் பதித்த விஜய்.. இந்த 2 தொகுதிகளுக்கு குறி.. திராவிட கட்சிகளுக்கு ஸ்கெட்ச்..!
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்பத்தூருக்கு வருகை தந்துள்ள தவெக விஜய் விமான நிலையம் முதல் பீளமேடு அவிநாசி சாலை சந்திப்பு வரை திரண்டு நின்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெற இருக்கின்றது. முதல் நாளில் 10 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாகவடி முகவர்களும், அதேபோன்று இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்க உள்ளனர். முதல் நாளான இன்று மேற்கு மண்டலங்களை சார்ந்த மாவட்டங்களான ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெறும். முதல் நாளில் 10 மாவட்டங்களும், அதேபோன்று நாளை 14 மாவட்டங்களுக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இன்று 10 மாவட்டங்களுக்கான கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பூத் கமிட்டி கருத்தரத்தில் பங்கவுள்ளனர். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலமாக கோயம்புத்தூர் வந்திருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு, கோவை விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்பத்தூருக்கு வருகை தந்துள்ள தவெக விஜய் விமான நிலையம் முதல் பீளமேடு அவிநாசி சாலை சந்திப்பு வரை திரண்டு நின்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
தொண்டர்களின் வரவேற்பால் உற்சாகமான விஜய், தன்னுடைய கட்சித் துண்டை வீசி எறிய அன்போடு பெற்றுக்கொண்ட தொண்டர்கள் அதனை கழுத்தில் அணிந்து கொண்டு உற்சாக மிகுதியால் ஆராவாரம் செய்தனர். விஜயின் கோவை விசிட்டி குட்டி ரோடு ஷோவாக மாறிவிட்டது. விஜய் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை என எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம், நெற்றி பொட்டில் அடித்தது போல விஜய்யின் கோவை விசிட் அமைந்திருப்பதாக தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: திடீரென தவெக தொண்டர் செய்த காரியம்; மிரண்டு போன விஜய் - வைரல் வீடியோ!
கோவையில் விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த வரவேற்பை அடுத்து, தற்போது கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகமே வெற்றிபெறும் எனும் பரவலான கருத்து நிலவுகிறது. ஏற்கனவே கோவையில் கால் பதிக்க பாஜகவும், திமுகவும் போட்டி, போட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரே ஒரு ரோட் ஷோ நடத்தி ஒட்டுமொத்த கோவையை தெறிக்கவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: முதலில் அவர் வரட்டும்.. விஜய் அரசியலுக்காக வெயிட்டிங்.. வெடி வெடிக்க காத்திருக்கும் விந்தியா..!