×
 

சிவகங்கை அதிர வைத்த கொடூர சம்பவம்..பள்ளி சென்ற சிறுமிகள் சடலமாக மீட்பு.. 

சிவகங்கை அருகே அங்கன்வாடி சென்ற இரு சிறுமிகள் கண்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பாலி மதுரை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரது மகள் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் அதே பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் காலை பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் வழக்கம் போல் சென்றிருந்த நிலையில், மீண்டும் மதிய உணவு இடைவேளைக்காக அழைத்துச் செல்ல வரும் போது இரு சிறுமிகளும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் இருந்து காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வள்ளி வளாகம் முழுவதும் இரு குழந்தைகளையும் தேடி உள்ளனர். இந்நிலையில் தான் குழந்தைகளின் உடல் பள்ளி வளாகத்திற்கு எதிரே இருந்த கண்மாயில் மிதந்து கொண்டிருந்ததை கண்டுள்ளனர். உடல்களை கைப்பற்றிய பெற்றோர், வளாகத்தில் இருந்து குழந்தைகள் வெளியே சென்றதற்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பவே பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

மேலும் சிறுமிகளின் உயிரிழப்பிற்கு ஆசிரியர்களின் அலட்சியப் போக்கே முக்கிய காரணம் இன்று குற்றம் சாட்டி சிறுமிகளின் உடல்களை பள்ளி முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறியதுடன் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க கோரி சிறுமிகளின் பெற்றோர்கள் உட்பட உறவினர்கள் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என உறுதி அளித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உயிரிழந்த கூட சிறுமிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். முன்னதாக சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் தாய்மேரி ஏற்கனவே பணி ஓய்வு பெற்று ஓராண்டு பணி நீடிப்பில் இருந்த நிலையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இது புதுசா இருக்குண்னே.. நாற்காலிக்கு ரூ. 10.. புது தொழிலால் நபருக்கு குவியும் பாராட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share