கோவையில் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ..! செல்பி எடுத்து மக்கள் உற்சாகம்..!
கோவையில் ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட செல்லும் வழியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார்.
கோவையில் கட்டப்பட உள்ள ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது அவரை சந்திக்க வழிநெடுகிலும் தொண்டர்கள் காத்திருந்தனர். உதயநிதி ஸ்டாலினை கண்டதும் மக்கள் உற்சாகமடைந்தனர். மேலும், உதயநிதியிடம் கை குலுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டு மக்கள் மகிழ்ந்தனர். கோவையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடத்தி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினும் கோவைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக வெற்றியை அடித்து நொறுக்கிய அதிமுக..! என்எல்சி தொழிற்சங்க தேர்தலில் வேட்டு..!
இதையும் படிங்க: அமைச்சர் பதவியை விட்டு இன்று விலகும் செந்தில் பாலாஜி.? அடுத்து பொன்முடி.? திமுகவில் அதிரடி மாற்றங்கள்!