கலாட்டா, கூச்சல், குழப்பம்! வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டம் ரத்து
வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எம்.பி.க்களிடையே கலாட்டா, கூச்சல் குழப்பம் நடந்ததால் இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்ள் கூச்சலிட்டதைத்தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கல்யான் பானர்ஜி, முகமது ஜவாத், அ.ராசா, அசாசுதீன் ஓவைசி, நசீர் ஹூசைன், மொஹிபுல்லா, எம் அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதிம் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவராக இருக்கும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மற்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் பேச அனுமதிக்க மறுக்கிறார், கருத்துக்களை கேட்கவும், பேசவும் அனுமதிப்பதில்லை என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். திரணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யான் பானர்ஜி கூறுகையில் “ வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. கூட்டுக்குழுவின் தலைவர் யாரையும் பேச அனுமதிப்பதில்லை, யாருடைய பேச்சையும் கேட்பதில்லை.அந்த எம்.பிதான் துணை பிரதமர், துணை உள்துறை அமைச்சர் போல நினைக்கிறார். 24 மற்றும் 25ம் தேதிகளிலும் கூட்டம் நடத்த வேணடும் என்று கேட்டோம் ஆனால், இல்லை. எந்த அறிவிப்பும் இல்லாமல் விவாதிக்க வேண்டிய தலைப்புகளை மாற்றுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே பாஜாக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறுகையில் “ எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சிந்தனை இப்படித்தான் இருக்கும், குறிப்பாக ஓவைசி இப்படித்தான் இருப்பார். ஜம்மு காஷ்மீர் சார்பில் பிரதிநிதியாக வந்திருந்த மிர்வாஸ் உமர் பரூக்கை பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சல், குழப்பம் செய்து கலாட்டாவில் ஈடுபட்டனர். மசோதாவில் ஒவ்வொரு பகுதியாக விவாதிக்க விரும்பினோம் ஆனால் அதற்கு எம்.பிக்கள் இடமளிக்கவில்லை. இது நாடாளுமந்ற ஜனநாயகத்துக்கு எதிரானது 27ம் தேதிக்குள் கூட்டத்தை முடித்து 29ம் தேதி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் ஆனால், அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமான நிலையங்களில் கட்டணக் கொள்ளை: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விளாசல்
ஜனவரி 31ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வக்ஃபு திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. கடந்த 1995 வக்ஃபு சட்டம் கொண்டு வரப்பட்டது. வக்ஃபு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல், ஊழல், ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: ராமநாதபுரம் எம்.பி. பதவியை ராஜினாமா பண்ணுங்க.. நவாஸ் கனியை நெருக்கும் அண்ணாமலை!