நான்னா அவ்வளவு இலக்காரமா? விசிகவை வெளியேற்ற சதி.. ஆத்திரத்தில் கொந்தளித்த திருமா..!
திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற சதி வேலை நடப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென தான் கூறியதற்கு எதிர்கிறார்கள் ஆவேசபடுகிறார்கள் நாட்டு மக்களை பாதுக்காக்க வேண்டும் இந்தியர் அனைவரும் பாதுகாக்க வேண்டும். இந்திய மண்ணில் வசிப்பவரக்ள் அனைவரும் இந்தியர் என்று கூற பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அவர்கள் இஸ்ஸாமியர்கள், இந்துகள் என்ன பிரிக்கிறார்கள். இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கு பகையை மூட்டுகிறார்கள் எப்படி நல்லிணக்கம் தழைக்கும், இந்துக்களுக்கு, பார்சிகளுக்கும், கிறித்துவர்களுக்கும், இஸ்ஸாமியர்களுக்கு இடையே பகையை மூட்டுகிறார்கள். இந்துகளும் இஸ்ஸாமியர்களும் சகோதரர்கள் என்று பாஜக தலைவர்கள் ஒரு போதும் பேசியதில்லை என சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் சில பேர் கூட்டம் கூட்டி காண்பிப்பார்கள் அது தேர்தலில் பேரம் பேசுவதற்காக செய்வார்கள், மதச்சார்ப்பிண்மையை காப்பாற்ற மே 31 ஆம் தேதி திருச்சியில் விசிக சார்பி வக்பு சட்டத்திற்கு எதிராக மாநாடு நடத்தபட உள்ளது. ஒரே தேசம் ஒரே மொழி ஒரே மதம் இருக்க வேண்டுமென ஆர் எஸ் எஸ் சின் கோட்பாடாக உள்ளது. பல மதங்கள், கலாச்சாரம், பல மொழி இருக்க கூடாது இந்தி எல்லோரும் பேச வேண்டும் என்பது தான் இந்துதுவா அஜெண்டாஇந்துதுவாவிற்கு எதிராக விசிக பேசுவதாக தோற்றத்தை பாஜக உருவாக்குவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஸ்டாலினை பதவி விலக கூறினீர்களா? என கேட்கிறார்கள் இது முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுவதாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா முதலமைச்சராக உள்ளார் ஆனால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை எல்லை பாதுகாப்பு ராணுவ கட்டுபாட்டில் உள்ளது. கள்ளச்சார உயிரிழப்பிற்கு மதுக்கடைகளை மூட கூறியுள்ளோம் அதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநரின் அடாவடி.. துணைவேந்தர் மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்.. முதல்வருக்கு திருமா அழுத்தம்!!
சுப்பிரமணிய சுவாமி மோடியை பதவி விலக கூறுகிறார். ஆனால் அவரை விமர்சனம் செய்ய மறுக்கிறார்கள் நான் கூறினால் அதனை விமர்சிக்கிறார்கள் திருமாவளவன் என்றாக் எலக்காரம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும் கட்சியாகவும் விசிக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணியிலிருந்து விசிகவை வெளியேற்ற எவ்வளவோ சதி வேலைகள் பார்த்தார்கள். சகோதரத்துவத்தை சிதைத்து கொண்டு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என கூறுவது எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுகவை நம்பி விசிக இல்ல..! மெல்ல மெல்ல காய் நகர்த்துராங்க.. உடைத்து பேசிய திருமா..!