விஜய்க்கு என்னைப்போல ஒரு அடையாளம் இருக்கிறதா..? அவர் ஒரு 'ஜீரோ'..! ஆ.ராசா ஆவேசம்..!
இதெல்லாம் பொய் பிம்பம். இப்படி வரும் அப்படியே போய்க் கொண்டே இருக்கும். நாங்கள் எவ்வளவு பேரை பார்த்து விட்டோம்
''விஜய்க்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறதா? ஆ.ராசா என்றால் திராவிட சித்தாந்தம் பேசுவார் அப்படி என்கிற ஒரு அடையாளம் இருக்கிறது'' என திமுக துணைப்பொதுச்செயாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், ''ஒவ்வொருத்தருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. அதுபோல விஜய்க்கு என்ன அடையாளம் இருக்கிறது? இப்போது ஆரம்பித்து இருக்கிற அரசியல் கட்சியை விடுங்கள். தமிழ்நாட்டில் விஜய்க்கு என்ன கொள்கை, அடையாளம்? ஒன்றை சொல்லுங்கள்.
எந்த அடையாளமும் இல்லாத ஒரு மனிதர். எம்.ஜி.ஆர் திமுகவின் பொருளாளராக இருந்தவர். திமுகவின் கொள்கைகளை சினிமாவிலும், பாடல்களிலும் கொண்டு சேர்த்தவர். மக்களிடம் சேர்த்தவர். அந்த பங்கு அவருக்கு இருந்த காரணத்தினால்தான் திமுகவின் கொள்கை சாயலிலும் நடிப்பில் அவர் பெற்ற பிரபலமும், புகழும் அவர் வைத்திருந்த பணமும் ஒருங்கி சேர்ந்து அவருக்கு ஒரு இடத்தை கொடுத்தது.
இதையும் படிங்க: வக்ஃபு வழக்கு: ஆணியே புடுங்காமல் 'க்ரெடிட்' திருடும் விஜய்- ஆதவ்..? வெளிவந்த உண்மை..!
எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு நடிகர் இருக்கிறார்களா? விஜய் இருக்கிறாரா? இவருக்கு என்ன கொள்கை? திடீரென பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் எல்லா புகைப்படங்களையும் போட்டுக் கொள்கிறார். இந்த படங்களுக்கும் அவருக்கு என்ன சம்பந்தம்? இந்த கொள்கைகளை அவர் திரைப்படங்களில் எப்போதாவது பேசி இருக்கிறாரா? அதற்காக ஏதாவது திட்டங்கள் வைத்திருந்தாரா? தனி மனிதராக கூட செய்யவில்லை.
தமிழுக்காக, சாதி ஒழிப்புக்காக, மத நல்லிணத்தை, குறிப்பாக தமிழ் வளர்ச்சிக்காக தனிப்பட்ட முறையில் நான் இத்தனை கோடி செலவு செய்தேன். நான் ஒரு அறக்கட்டளை வைத்திருக்கிரேன். இதையெல்லாம் செய்து முடித்துவிட்டு போதாது, தனி மனிதனாக இருக்க விரும்பவில்லை. ஒரு நிறுவனத்தை நான் ஏற்படுத்த விரும்புகிறேன். நான் ஏற்படுத்த போகிற நிறுவனம் அதிகமான விளைவுகளை, தாக்கத்தை, தமிழ் மக்களுக்கு வழங்கும் என்று சொல்லிவிட்டு வந்தால் விஜய் பற்றி பேசலாம்.
எதுவுமே இல்லையே... ஒரு நடிகர். அவருக்கு பின்னால் கொஞ்சம் கூட்டம் இருக்கிறது. திமுகவும் பிடிக்கவில்லை, அதிமுக பிடிக்கவில்லை என்று ஊருக்கு ரெண்டு பேர் திண்ணையில் உட்கார்ந்து பேசுவார்களே. அந்த ரெண்டு பேர் கூட ஆதரவு கொடுப்பார்கள். இதெல்லாம் பொய் பிம்பம். இப்படி வரும் அப்படியே போய்க் கொண்டே இருக்கும். நாங்கள் எவ்வளவு பேரை பார்த்து விட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியா? வெளியான பரபரப்பு தகவல்!!