×
 

"பெரியாரை இழிவுபடுத்துவது யாராக இருந்தாலும் அவர் ஈனபிறவி தான்" - துரை வைகோ ஆவேசம்..!

தந்தை பெரியாரை இழிவுபடுத்திய ஈனப்பிறவிகளுக்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அந்த ஈரோடு மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

‘‘சமூக நீதிக்காக பல காலம் உழைத்த தலைவரை, தந்தை பெரியாரை இழிவுபடுத்துபவர்கள் யாராக இருந்தாலும் ஈனப்பிறவி தான்’’ என மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான துரை.வைகோ ஆவேசப்பட்டுள்ளார்.  

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட அவர்,  ‘‘கடந்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் இந்திய கூட்டணியை வெற்றி பெற வைத்தனர். அதேபோல் இந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. ஏனென்றால் இது தந்தை பெரியாரின் மண். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு சமூக நீதியை நிலை நிறுத்துவதில் தந்தை பெரியார் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்.

 

இன்றைக்கு தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி வைக்கிறது என்றால் அதற்கு கல்வி வளர்ச்சி தான் காரணம். இப்படிப்பட்ட கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் அடிப்படை தளம் வகுத்துக் கொடுத்தது தந்தை பெரியாரும், திராவிட இயக்கங்களும். இன்றைக்கு பெண் சமுதாயம் முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு தந்தை பெரியார் தான் காரணம். இப்படிப்பட்ட தலைவரை, தந்தை பெரியாரை இழிவுபடுத்திய ஈனப்பிறவிகளுக்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அந்த ஈரோடு மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அதற்கு முழு நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கின்றோம்.

இதையும் படிங்க: ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் குற்றங்கள் குறைவு...’ துரை வைகோவின் சல்சாப்பு... ஆதாரங்களை காட்டி செம ஆப்பு..!

 இன்றைக்கு ஆங்கிலப் புலமையுடன் தமிழ்நாட்டு இளைஞர்கள் பல்வேறு நாடுகளில் ஆதிக்கும் செலுத்துகிறார்கள் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பல காலம் உழைத்த தலைவரை இழிவுபடுத்துபவர்கள் ஈனப்பிறவி தான் ஈனப்பிறவி தான் ஈனப்பிறவி தான்’’ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விசாரிக்காமல் ஏன் தாவுகிறீர்கள்?...கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு நேரடி கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share