தமிழர்களுக்கு ஆபத்து: கோகுலம் சிட் பண்ட் மூலம் மலையாள தயாரிப்பாளர் வன்மம்- பரபரக்கும் கடிதம்..!
கோகுலம் சிட்பண்ட்ஸில் சீட்டுத் தொகைகளுக்காக பல நூறு கோடிகளை மூலதனம் ஆக்கி கோபாலன் போன்ற இன வெறியர்களை மில்லியனிலும், ட்ரில்லியனிலும் புரள வைத்திருக்கும் தமிழர்களே...
பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள எம்புரான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்2 எம்புரான்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்நிலையில், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், ஒருங்கிணைப்பாளர், ச.பென்னிகுயிக் பாலசிங்கம் எழுதியுள்ள ஒரு பதிவில், ''கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கும்,எம்புரான் திரைப்படம் போகிறபோக்கில் தேனி- திண்டுக்கல்- மதுரை- சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் 10 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராகவும் களத்தில் நிற்கிறது.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு எதிரான வழக்கு.. ரத்து செய்ய முடியாது.. நீதிமன்றம் திட்டவட்டம்..!
படத்தை இயக்கிய பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு இன வெறியன் என்பதை கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது நிரூபித்தே வருகிறார். ஒரு கலைஞனுக்கு மொழி, எல்லை, இன பேதம் இருக்கக் கூடாது என்கிற வரையறையை தாண்டி செயல்படும் இந்த பிரித்விராஜனுடைய வாழ்வும் வரலாறும் இந்த தமிழகத்திலே தான் இன்று வரை இருக்கிறது.
சரியான அடியை இன்னமும் பிரித்விராஜ் சுகுமாரன் தமிழர்களிடத்தில் வாங்கவில்லை என்பதால், அவ்வப்போது தன்னுடைய வன்மத்தை முல்லைப் பெரியாறு அணை மீது கக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். தமிழகத்திலே திருமணம் செய்து, தமிழகத்திலே பல்லாயிரம் கோடிகளில் வருமானத்தை பெறும் மோகன்லாலுக்கு என்ன வந்தது என்கிற கேள்வியும் பிறக்கிறது.
தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி குமரி மாவட்டத்தில் மட்டும் காற்றாலைகள் மூலமாக ஆண்டொன்றிற்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் வருமானத்தை ஈட்டும் மோகன்லால், படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கெதிராக காட்சிகள் இருக்கிறது என்று தெரிந்தும்,அது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.
இந்தப் படத்தை தயாரித்த இருவரில் ஒருவரான சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர். பெயர்தான் ஈழத் தமிழரே தவிர அவர் ஒரு சிங்கள கைக்கூலி. தமிழர்களுக்கு எதிராக ஒரு செயல் நடக்கிறது என்றால் பணத்தை அள்ளி இறைக்ககூடிய வேலையை செய்வதில் முன்னணியில் இருக்கும் இந்த சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு, அவர் கோபாலனுடன் இணைந்து தயாரிக்கும் எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணைக்கெதிரான காட்சிகள் இருக்கிறது என்று தெரியாமலா இருந்திருக்கும்.
ஆனாலும் மிகப்பெரிய முதலீட்டை கோபாலனுடன் இணைந்து இந்தப் படத்தில் மூலதனமாக்கி இருக்கிறார் அல்லிராஜா. இவர்களுக்கு எல்லாம் தளம் பல்வேறு இடங்களில் இருந்தாலும், சென்னை மயிலாப்பூர் மற்றும் கோடம்பாக்கத்தை மூலதனமாகக் கொண்டு தன்னுடைய தொழிலை தொடங்கிய மலையாளியான கோகுலம் கோபாலன், தமிழகத்தில் நடத்தும் கோகுலம் சிட்பண்ட்ஸின் கிளைகள் மட்டும் 447.
இந்தியா முழுவதும் கோகுலம் சிட்பண்ட்ஸிற்கு கிளைகள் இருந்தாலும், தமிழகத்தில் தான் அதிகம். ஆண்டு ஒன்றிற்கு 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் என்பது விழுக்காடு வருமானம் தமிழகத்து அப்பாவிகளின் உழைப்பில் இருந்துதான் வருகிறது என்பது கோபாலனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் மனதிற்குள் ஊறிக் கிடக்கும் தமிழர்கள் மீதான வன்மம் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
ஹோட்டல்ஸ், ரிசார்ட், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள், சினிமா தயாரிப்பு, விநியோகம் என்று கோடிகள் புரளும் தொழிலில் கோபாலன் கால் வைப்பதற்கு காரணம் பச்சை தமிழர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
இத்தனை பெரிய வருமானத்திற்கு காரணமாக இந்த அப்பாவி தமிழர்கள் இருக்கிறார்களே என்று தெரிந்தும், எந்த உறுத்தலும் இன்றி தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய பாசனப்பரப்பான பெரியாறு பாசனப்பரப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது இவர் தயாரித்து விநியோகம் செய்த எம்புரான் திரைப்படம்
.
ஒரு நாயர் டீக்கடையில் நடக்கும் அவலங்களை ஒரு செய்தியாக சொல்லி, ஒரு திரைப்படத்தை நாம் எடுத்து அதை கேரளாவில் விநியோகம் செய்ய முடியுமா...? தமிழ்நாட்டில் மட்டும்தான் எதையும் மூலதனம் ஆக்க முடியும் என்பதற்கு உதாரணமாக நின்று கொண்டிருக்கிறது எம்புரான் திரைப்படம். மதம் கலவரம், பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் என்று பல திசையில் எம்புரான் திரைப்படத்தின் கதை சென்றாலும், அதன் மையக்கரு முல்லைப் பெரியாறு அணைதான்...
பிரித்திவிராஜ் சுகுமாரனுக்கு முல்லைப் பெரியாறு மீது வன்மம் இருக்கிறது என்றால், ஆம்பள நீ வண்டிப் பெரியாருக்கோ அல்லது குமுளிக்கோ வந்து போராட்டத்தை நடத்து. அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு அனுதினமும் நடையாய் நடந்து தங்கள் கால்களை தேய்த்துக் கொண்டிருக்கும் எர்ணாகுளம் மாவட்டத்து டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்களைப் போல நீயும் டெல்லியை நோக்கி நடக்க ஆரம்பிக்கலாம்.
அல்லது 2011 ஆம் ஆண்டு சோகன் ராய் என்கிற கூமுட்டை இயக்கிய டேம் 999 படத்தை போல தனியாக ஒரு படத்தை எடுத்து தமிழகத்தில் அதை திரையிட்டு உன்னுடைய வீரத்தை காண்பிக்கலாம். எதுவுமே இல்லாமல் அடுத்தவனுடைய பணத்தில் உன்னுடைய அரிப்பை தீர்த்துக் கொள்ளலாம் என்பது உனக்கு சரியாகப்படலாம், ஆனால் அது இந்த மண்ணுக்கும், உன்னுடைய மனசாட்சிக்கும் எதிரானது.
நீ எதை வேண்டுமானாலும் உன்னுடைய திரைப்படத்தில் பேசிவிட்டு போ எங்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் தமிழர்களின் ஜீவாதார உரிமைகளில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணை மீது கையை வைக்க நினைத்தால் அது உனக்கு எதிராகத்தான் திரும்பும். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன்... கோகுலம் சிட்பண்ட்ஸில் சீட்டுத் தொகைகளுக்காக பல நூறு கோடிகளை மூலதனம் ஆக்கி கோபாலன் போன்ற இன வெறியர்களை மில்லியனிலும், ட்ரில்லியனிலும் புரள வைத்திருக்கும் தமிழர்களே...
ஒரு சேர உங்கள் சீட்டுத் தொகைகளை திரும்பப் பெறுவதற்கு உண்டான வேலைகளை தொடங்குங்கள்... இந்தக் கோகுலம் சிட்பண்ட்ஸ் அதிபர் கோபாலான் தயாரித்து விநியோகம் செய்திருக்கும் எம்புரான் திரைப்படம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்காவிட்டால் கேரளாவிற்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்கிற செய்தியை கருவாகக் கொண்டு வெளி வந்திருக்கும் நிலையில், உங்களுடைய பணிகளை இன்றே தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இங்கே உள்ள சில முற்போக்கு முண்டங்கள், இதை மொழிவெறி என்றும் இனவெறி என்றும் பகடி செய்யலாம். அப்படி பகடி செய்யும் முண்டங்களால், தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிற்கு சென்று ஒரு நாள் வாழ்ந்து விட முடியாது என்பதை மனதில் வைத்து, நீங்களும் இந்த சிட்பண்ட்ஸ்-க்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்பி முடிக்கிறேன்'' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விண்ணை பிளந்த "அரோகரா" கோஷம்.. வெகு விமரிசையாக நடைபெற்ற மருதமலை முருகன் கோவில் மகா குடமுழுக்கு விழா..!