''2026 ஏப்ரலுக்கு பிறகு இன்றைக்கு பாஜகவின் கொடியை அவிழ்க்கிற ஒவ்வொரு அதிகாரிக்கும் தக்க பதிலடி பாஜக அடங்கிய அரசாங்கம் கொடுக்கும்'' என பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''தயவுசெய்து காவல்துறை அதிகாரிகள் உங்கள் எல்லையை புரிந்து செயல்படுங்கள். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா? நான் ரொம்ப எல்லாம் சொல்ல விரும்பவில்லை. 1976, 77 இல் இந்திரா காந்தியின் சர்வாதிகார நெருக்கடி நிலை ஆட்சியிலே, இங்கே இருக்கிற ரொம்பப் பேருக்கு தெரியாது.

அந்த காலகட்டங்களில் தலைமறைவு இயக்கத்தில் பணியாற்றியவன் என்ற முறையிலே சொல்கிறேன்.அந்த காலகட்டத்தில் அத்துமீறிய அதிகாரிகள் 1977 க்கு பிறகு நடவடிக்கைக்கு உள்ளானார்கள். அந்த மாதிரியாக 2026 ஏப்ரலுக்கு பிறகு இன்றைக்கு பாஜகவின் கொடியை அவிழ்க்கிற ஒவ்வொரு அதிகாரிக்கும் தக்க பதிலடி பாஜக அடங்கிய அரசாங்கம் கொடுக்கும். என்டிஏ கொடுக்கும். உங்கள் எல்லையை உணர்ந்து செயல்படுங்கள்.
இதையும் படிங்க: கெஜ்ரிவால் போல ஸ்டாலினும் ஜாமினில் வந்து பிரசாரம் செய்வார்.. கே.பி.ராமலிங்கம் கணிப்பு!
ஏனென்றால் இன்றைக்கு இந்து சமுதாயத்தை இழிவாக பேசுகின்ற ஒரு அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லி முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் டிஎன்ஏ அப்படி இருக்கிறது. நான் சொல்கிறேன். இந்து மதத்தை பரிகாசம் செய்வது தமிழ்நாட்டில் அதில் பொன்முடிதான் கடைசி நபராக இருக்க வேண்டும். இனிமேல் எந்தப் பயலும்... எந்தப் பயலும் இந்து மதத்திற்கு எதிராக பேசுவதற்கு துணியக் கூடாது. அந்த அளவிற்கு பெண்கள் வீதியிலே இறங்கி இருக்கிறார்கள்.

நிச்சயமாக சொல்கிறேன் நான், இந்துக்களே இன்றைக்கும் நான் சொல்கிறேன். பாம்பு என்றால் சீற வேண்டும். இல்லையென்றால் பாம்பை அடித்து விடுவார்கள். அதனால் நான் சொல்கிறேன் இந்த திராவிடிய ஸ்டாக், இழிவான சக்தி, ஈனப்பிறவிகள், இந்து விரோத தீய சக்திகள் வேரோடும் வேரடி மண்ணோடும் அரசியல் தட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டாக வேண்டும்.
அதற்கு தலைமை தாங்க இப்போது பொறுப்பிற்கு வந்திருக்கிறார் நமது அருமை சகோதரர் நயினார் நாகேந்திரன் அவர்கள். இந்த பொறுப்பில் எல்லாம் இருந்து அனுபவம் மிக்கவர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒவ்வொரு நபரையும் நான் மாண்புமிகு பிரதமரை போட்டியில் இடுகிறார் என்று எண்ணி அவர்களுக்கு ஆதரவாக உழைக்க வேண்டும்.

அன்னைக்கு இல்லை ஒரு பள்ளி மாணவனாக நான், குவாலிஃபைடு சார்ட்டட் அக்கவுண்ட், வழக்கறிஞர் நான். அன்று அன்றைய பாடத்தை பள்ளியில் படித்தால் பரிட்சையில் பிரச்சனை இல்லை. ஆகையால் இன்றிலிருந்து தீய சக்தி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இந்து விரோதத் தீய ஆட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் சிதைக்க வாருங்கள்'' எனப் பேசினார்.
இதையும் படிங்க: 'பேடியே… கேடியே… பொன்முடிக்கு செருப்பைத் தூக்கி எதிர்ப்பு... அதிமுக மகளிரணியின் அறிவார்ந்த போராட்டம்..!