தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது இருந்து காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுழல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆளும் கட்சியான திமுக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். திமுக தரப்பில் சுனில் கணுக்கொலு மற்றும் ரோபின் ஷர்மா( எஸ்டிசி) ஆகியோர் வியூக வகுப்பாளர்களாக தனித்தனியாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
ரோபின் ஷர்மா திமுக ஒட்டுமொத்த கட்சிக்கும், சுனில் கணுக்கோலு,உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் வியூக வகுப்பாளர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஒரு அதிரடி நிகழ்வாக பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜய் சந்திப்பு நடைபெற்றது. திமுகவுக்கு எப்படி வியூக வகுப்பாளர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தவெகவுக்கும் வியூக வகுப்பாளர் வேண்டுமென விஜய் விரும்பினாராம்.

இதனை எடுத்து புதிதாக கட்சியில் பொதுச் செயலாளராக தேர்தல் மேலாண்மை பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா தான் பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தாராம். இந்த சந்திப்பு சென்னை நீலாங்கரையில் உள்ள கசூரினா டிரைவ் பகுதியில் அமைந்துள்ள விஜய் வீட்டில் நடைபெற்றது
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு சதவிகிதம்,இது சமீபத்திய கணக்கெடுப்பு புள்ளி விவரம் என்பதையும் பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு தெரிவித்தாராம்.
இதையும் படிங்க: இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்...
ஏற்கனவே பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தோடு உள்ள தொடர்பு மற்றும் கள அனுபவம் குறித்தும் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் பகிர்ந்து கொண்டாராம், எந்த வகையில் தேர்தலை அணுக வேண்டும், என்ன செய்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் விளக்கமாக விஜய்க்கு எடுத்து கூறினாராம்.

விஜய் உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்புக்கு அடுத்து திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பிரசாந்த் கிஷோர் மிக ரகசியமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினாராம். இந்த சந்திப்புக்கு ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்திருந்தாராம். விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உடனான பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் ஒத்து போனதாம்,பெரிய அளவில் வேறுபாடு இல்லையாம். இதனை அடுத்து மிகுந்த உற்சாகம் அடைந்த பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்றத்தை தேர்தலில் திமுகவுக்காக வேலை செய்த ஐபேக் முன்னாள் ஊழியர்களை அழைத்து ஒரு மீட்டிங் போட்டாராம்.

அதில், தான் தொடர்ந்து விஜய் கட்சிக்கு வேலை செய்யப் போவதாகவும் மீண்டும் வந்து தம்மோடு கைகோர்த்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம். திமுக தரப்பில் இரு வியூக வகுப்பாளர்கள் ஒருபுறம் அடித்து நொறுக்கி கொண்டிருக்க தற்போது தவெக தரப்பில் பிரசாந்த் கிஷோர் இணைந்துள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்தே திமுகவின் ஒவ்வொரு அடியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம்