மகாராஷ்டிரத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் வித்தியாசம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும், தேர்தல் ஆணையம் விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக சாடியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "தனது அரசியலமைப்பு கடமையை தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை. அதனால், நாட்டில் பெருவாரியான மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்து விட்டனர்." என்று கபில் சிபல் விமர்சித்தார்.
அவரிடம், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கபில் சிபல், "தேர்தல் ஆணையம் ஒரு செயல்படாத அமைப்பு. அரசியல் அமைப்பின்படி அதனிடம் எதிர்பார்க்கப்படும் கடமைகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தவில்லை என்று அதனால்தான் சொல்கிறேன். தேர்தல் ஆணையம் இன்று ஒரு தோல்வியுற்ற நிறுவனமாக உள்ளது. நாட்டின் பெருவாரியான மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்.
இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் இணைப்பு.. முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்.. எச்சரிக்கும் காங்கிரஸ்.!!

எனவே இந்தப் பிரச்சினையை எவ்வளவு விரைவாக நாம் கையாளுகிறோமோ அவ்வளவு விரைவாக ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு நமக்கு அதிகமாகும். இதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, மின்னணு வாக்கு இயந்திரம் தவிர, தேர்தல் செயல்பாட்டு முறை பாதிக்கப்படிருப்பதை உணர்த்தும் பல தீவிரமான பிரச்சினைகளும் உள்ளன. நாம் ஒன்றாக இணைந்து அதனைத் தீர்க்க வேண்டும்" என்று கபில் சிபல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: கட்டாயமாக்கும் தேர்தல் ஆணையம்..!