இந்த உலகைவிட்டு சில மனிதர்கள் மறைந்தாலும், தொடர்ந்து மக்களின் மனதிலும், நினைவுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், தேசத் தலைவர்கள், இரக்க மனம் படைத்த மனிதர்கள் எனப் பலரும் தங்களின் செயல்களாலும், இரக்கமனதாலும், மக்கள் சேவையாலும் வாழ்கிறார்கள். அதே போலத்தான் தொழிலதிபர் மறைந்த ரத்தன் டாடாவும் இந்த உலகைவிட்டு கடந்த 2024, அக்டோபர் மாதம் மறைந்தாலும் இன்னும் அவரால் வாழ்வு பெற்றவர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய வாழ்நாட்கள் முழுவதும் தனக்காக பணி செய்த, வேலையாட்கள், சமையல்காரர்கள், ஓட்டுநர்கள், காவலாளி, வளர்ப்பு நாய், வீட்டு துப்புறவு ஊழியர் என அனைவருக்கும் தன்னுடைய நன்றிக்கடனாக ரூ.3.50 கோடியை வழங்கியுள்ளார் ரத்தன் டாடா.
இதையும் படிங்க: சுறுசுறுப்பில்லாத சுற்றுலாத்துறை.. ஒதுக்கிய நிதியை பயன்படுத்தல.. நாடாளுமன்ற நிலைக்குழு வேதனை..!
ரத்தன் டாடா தனது எஸ்டேட்டில் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், பகுதிநேரப் பணியாளர்களுக்கும், கார்களை சுத்தம் செய்பவர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா தான் உயிரோடு இருக்கும்போது பயன்படுத்திய விலை உயர்வான கோட் சூட்கள், தகாஸ், போலோ, ப்ரூஸ் பிரதர்ஸ், பிர்னோய் சூட்ஸ், ஹெர்மட் டைஸ் ஆகிய உடைகளை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கி, அவர்கள் மூலம் ஏழைகளுக்கு வழங்கக் கூறியுள்ளார்.
ரத்தன் டாடாவுக்கு உதவியாக இருந்த நிர்வாக உதவியாளர் சாந்தானு நாயுடு அமெரிக்காவில் கார்னெல் பல்கலைக்கழக்தில் எம்.பி.ஏ. படிக்க ரூ.1 கோடி கடன் வழங்கியிருந்தார். அந்த கடனை அவரிடம் கேட்கக்கூடாது என்று டாடா ரத்து செய்துள்ளார்.
2022, பிப்ரவரி 23ம் தேதி ரத்தன் டாடா கூறுகையில் “ என்னுடைய இழப்புக்குப்பின், என்னுடைய உதவியாளர் சாந்தனு, சமையல்காரர் கோனார், ஓட்டுநர் ராஜூ லியான் ஆகியோருக்கு நான் கொடுத்த கடன் தொகையை வசூலிக்க என்னுடைய உதவியாளர்கள், நிர்வாகிகள் யாரும் முயற்சிக்கக்கூடாது. நான் என்னுடைய பணியாட்கள், ஓட்டுநர்கள், வேலையாட்களுக்காக வழங்கிய தொகையையும் திரும்பக் கேட்கக்கூடாது, அவர்களுக்கான நான் செய்யும் நன்றிக்கடன்” எனத் தெரிவித்துள்ளார்.

டாடா அறக்கட்டளை ஆலோசகர் ஹோசி டி மலேசராவுக்கு ரூ.5 லட்சம், அலிபாஹ் சொகுசு பங்களாக கவனிப்பாளர் தேவேந்தருக்கு ரூ.2 லட்சம், தனிப்பட்ட உதவியாளர் தீப்திக்கு ரூ.1.50 லட்சம், பியூன்கள் பாண்டுரங்கன், கோபால் சிங் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம், வேலையாள் சர்பிராஸ் வாங்கிய ரூ.2 லட்சம் கடனும் தள்ளுபடி செய்கிறேன் என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய்க்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சத்தை அதன் பராமரிப்புக்காக ஒதுக்கியுள்ளார். ரத்தன் டாடா தனது உறவினர் ஜேக் மலேட்டை பிரிட்டனில் வேர்விக் பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.27 லட்சம் வழங்கிய கடனையும் தள்ளுபடி செய்தார். டாடாவின் எஸ்டேட் பகுதியை தாஜ் முன்னாள் ஊழியர் மோகினி தத்தாவுக்கு வழங்கக் கூறியுள்ளார்.
ரூ.85 லட்சம் மதிப்புள்ள தன்னுடைய செசல்ஸ் நிலத்தை ஆர்என்டி அசோசியேட்ஸுக்கு வழங்க டாடா தெரிவித்துள்ளார். இதில் உச்சக்கட்டமாக தனக்கான இறுதிச் சடங்குகள் செய்யவதற்கும், அடுத்தடுத்த செலவுகளுக்கும் தனியாக நிதியை ஒதுக்கியுள்ளார்.
இதையும் படிங்க: அடித்து சவால் விட்ட துரைமுருகன்..! திமுகவுடன் கைகோர்த்த பாஜக..!