இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக உள்துறை மந்திரி அமித்ஷா பார்க்கப்படுகிறார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து 2 மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை, தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக பேசினேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமித்ஷாவை புகழ்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர்,
இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக வரி பாக்கி: ஆர்.பி.உதயகுமார் அலுவலகம் முன் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி..!
தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், எட்டுக் கோடி தமிழர்களுடைய ஒரே நம்பிக்கை. உலக தமிழர்களின் அடையாளம், புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்ம், இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுகிற மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தது இன்றைக்கு இந்திய நாட்டிலேயே கவனத்தை ஈர்த்து இருக்கிற தலைப்புச் செய்தியாக இருப்பது ஏன்? என்று நாம் எண்ணிப் பார்க்கின்றோம். தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைக்கான அவற்றை நயமாக, பக்குவமாக எடுத்து வைப்பதிலே வல்லவர், திறமையானவர் என்று பெயர் பெற்ற புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி. இன்றைக்கு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுத் தருவார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவமாக பார்க்கப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து இரண்டு மணிநேரத்துக்கு மேலாக பேசியிருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். 
இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சந்திப்பின் காரணம் என்ன என்பதை திண்ணை பிரசாரம் மூலமாக அதிமுகவினர் எடுத்துச் சொல்ல வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி?... சிவி சண்முகத்திற்கு அடித்த ஜாக்பாட்...!