கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று(ஏப்ரல்1) முதல் குப்பைகளை சேகரிக்கும் பணிக்கு கட்டணத்தை வசூலிக்கும் நடைமுறையை பெங்களூரு மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டணம் ஒவ்வொரு கட்டிடத்தின் அளவுக்கு ஏற்ப மாறுபடும்.
குடியிருக்கும் அடுக்குமாடி வீடுகளில் 600 சதுர அடிக்குள் இருந்தால் அந்த வீட்டுக்கு மாதத்துக்கு ரூ.10 என ஆண்டுக்கு ரூ.120 வசூலிக்கப்படும். வீட்டின் சதுர அடி அதிகரிக்கும்போது, குப்பைக்கான கட்டணமும் உயரும்.
இதையும் படிங்க: வீட்ட வாடகைக்கு விட்டு இருக்கீங்களா? வருமான வரித்துறையில் சொல்வது உங்களுக்குதான்!!

4ஆயிரம் சதுர அடி அதற்கு அதிகமாக இருந்தால், மாதக் கட்டணமாக ரூ.400 ஒருவீ்ட்டுக்கு வசூலிக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.4800 கட்டணம் வசூலிக்கப்படும்.
வர்த்தகரீதியான கட்டிடத்துக்கு ஒரு கிலோ குப்பைக்கு ரூ.12 என்ற ரீதியில் கட்டணம் வசூலிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 சதவீதம் கட்டணம் உயர்த்தபப்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அத்தியாவசிப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து குப்பைகளுக்கு வரிவிதிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கர்நாடக்தில் கிடைக்கும் நந்தினி பால், தயிர் ஆகியவற்றின் விலையும் ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டணமும் யூனிட் ஒன்றுக்கு 0.36 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

குப்பை வசூலிக்கும் கட்டணம் விவரம்:
• 600 சதுர அடிக்கு உட்பட்டிருந்தால் மாதத்துக்கு ஒரு வீட்டுக்கு ரூ.10
• 601 முதல் 1000 சதுர அடிக்கு உட்பட்டிருந்தால் ஒரு வீட்டுக்கு மாதம் ரூ.50
• 1000 முதல் 2 ஆயிரம் சதுர அடிக்கு ஒரு வீட்டுக்கு மாதம் ரூ.100 கட்டணம்
• 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் சதுர அடி வீட்டுக்கு மாதம் ரூ.150 கட்டணம்
• 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் சதுர அடி வீட்டுக்கு மாதம் ரூ.200 கட்டணம்
• 4 ஆயிரம சதுரஅடிக்கு மேற்பட்ட வீட்டுக்கு மாதம் ரூ.400 கட்டணம் வசூலிக்கப்படும்.
இதையும் படிங்க: என்னது சம்மதிச்சிட்டிங்களா..! அமெரிக்க வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.. காங்கிரஸ் வலியுறுத்தல்..!