கோவை மாவட்டம் கதம்பன் கொம்பை பகுதியில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். காரமடை அடுத்துள்ள இந்த வசந்து வரும் பழங்குடியின மக்கள் போதிய வசதி இன்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக மலையிலிருந்து கீழே வருவதற்கும் கீழே இருந்து மலை கிராமங்களுக்கு செல்வதற்கும் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கடம்பன்கொம்பை பகுதியைச் சேர்ந்தவர் மணி. கூலி தொழிலாளியான இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை அவரது உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்தும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை உடற்கூராய்விற்கு பின்னர் மருத்துவமனை அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது. அப்போது உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது காரமடை அருகே நீரடி என்ற பகுதியை ஆம்புலன்ஸ் வாகனம் வந்தடைந்ததை அடுத்து, அதற்கு அடுத்த பகுதிகளில் உள்ள சாலை பகுதிகளுக்குச் செல்ல போதிய சாலை வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் நீரடி பகுதியிலேயே நின்றுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டதாக நெகழ்ச்சி..!

மேலும் இதற்கு மேல் வாகனத்தை இயக்க முடியாது எனக் கூறி ஆம்புலன்ஸ் டிரைவர் மறுக்கவே மேலும் மற்ற சில உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உறவினர்கள் பலர் நீரடி கிராமத்திற்கு சென்றுள்ளனர். உறவினர்கள் மாம்புலன்ஸ் டிரைவர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, உயிரில் உடலை துணியால் சுற்றி, டோலி மூலம் தோலில் வைத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உடலை சுமந்தே சென்றுள்ளனர். பின்னர் மலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஊழல் முறையான இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் நலடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து போதிய சாலை வசதிகள் இல்லாததால் அவ்வப்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மருத்துவமனை செல்வதற்கு கூட அவதிக்குள்ளாவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் பாலங்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கினால் மலை கிராமத்திலேயே முடங்கி கிடப்பதாகவும் வேதனை தரும் அதனால் விரைவில் சாலை வசதி ஆக ஏற்படுத்தி தருமாறு பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உறவினர்கள் சிலர் மணியின் உடலை சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு தூக்கிச் செல்லும் வீடியோ ஆனது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தற்போது நெடிசன்களின் வசைபாடலுக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் மோசடி கும்பல்.. பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்..!