ஒவ்வொரு ஆண்டும் இந்த வீர தீர செயல் விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறும் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா மிருதங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 942 பேரின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. )0வீரதீரமாக செயலாற்றியது, மெச்சத்தக்க வகையில் சேவை புரிந்தது மற்றும் மிகச் சிறப்பான பணிகள் என்ற வகையில் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள காவல்துறை, தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் படை வீரர்களின் வீரதீர செயல்கள், மெச்சத்தக்க சேவை, மிகச் சிறப்பான பணி ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் 746 விருதுகள் மற்றும் பதக்கங்கள் என மொத்தம் 942 விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்தார்.
இதையும் படிங்க: அலங்கார ஊர்திகளின் வண்ணமிகு அணிவகுப்புடன், 76 வது குடியரசு தின விழா: டெல்லியில், ஜனாதிபதி திரௌபதி தேசியக் கொடி ஏற்றினார்
அவற்றில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 95 விருதுகள் அறிவிக்கப் பட்டு உள்ளன.

சிஆர்பிஎப் வீரர்கள் 19 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 5 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் மிகத் துணிச்சலாக பணியாற்றி பாதுகாப்பை உறுதி செய்ததற்காக 19 சிஆர்பிஎப் வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உயர்ந்த மரியாதைக்குரிய
விருதுகள்

ஆயுதப் படைகளுக்கு பரம் ரிஜிஸ்டர் சேவா பதக்கம் அதி விசிஸ்ட் சேவா பதக்கம் மற்றும் விசிஸ்ட் சேவா பதக்கம் ஆகவே மிக உயர்ந்த மரியாதைக்கு உரியவை.
துணிச்சலுக்கான பதக்கங்கள் ஆயுதப் படைகள் துணை ராணுவ படைகள் மற்றும் பொதுமக்களுக்கு வீரம் மற்றும் வீரச் செயலுக்காக வழங்கப்படுகிறது

போர்க்கால விருதுகள் இவை மாற்று படையினருக்கு எதிரான துணிச்சலான செயல்களுக்காக வழங்கப்படுகின்றன. இந்த வகை வீர விருதுகளில் மிக உயர்ந்தவர்கள் பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா மற்றும் வீரர் சக்கரா.
அசோக சக்ரா கீர்த்தி சக்கர மற்றும் சௌரிய சக்கரா ஆகியவை அமைதி காலத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகள் ஆகும்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலம்: 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறிய தலைநகர் டெல்லி; 2500 சிசிடிவி, 70 ஆயிரம் வீரர்கள் குவிப்பு