11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் பள்ளியின் சொத்துக்களை காப்பாற்ற புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கடைசி பொதுத்தேர்வு நடைபெற்று மாணவர்கள் பள்ளியை விட்டு புறப்பட்டு செல்லும்போது அந்த பள்ளியில் இருக்கக்கூடிய டேபிள், சேர், நாற்காலி ஃபேன் உள்ளிட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கக்கூடிய சம்பவங்களை தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. எனவே பள்ளியினுடைய இந்த சொத்துக்களை பாதுகாப்பு சென்னையினுடைய முதன்மை கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளுடைய தலைமை ஆசிரியர்கள் உள்ளூரில் இருக்கக்கூடிய காவல்துறையினரை கடைசி தேர்வு முடித்துவிட்டு மாணவர்கள் வெளியே செல்வதற்கு முன்னதாக, பள்ளிக்கு வந்து பாதுகாப்பு தர வலியுறுத்த வேண்டும் என்றும், மாணவர்கள் எந்தவிதமான அந்த சொத்துக்களையும் சேதாரப்படுத்தாமல் வெளியே செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி சுற்றறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இது அனுப்பப்பட்டிருக்கின்றது. தேர்வு மையமாக செயல்படக்கூடிய அந்த பள்ளிகளில் அப்பள்ளியினுடைய ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்களும் கூட தேர்வு முடியும் நேரத்தில் வருகை புரிந்து மாணவர்கள் அமைதியான முறையில் வெளியே செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அந்த மாணவர்கள் 12 ஆம் வகுப்போ 11 ஆம் வகுப்போ முடித்துவிட்டு வெளியே செல்லும் போது, அந்த கடைசி நாளில் டேபிள், சேர் போன்றவற்றை எல்லாம் அடித்து நொறுக்கும் சம்பவங்கள் அரங்கேறின.

இதையும் படிங்க: பள்ளி கல்வித்துறை கொடுத்த ஷாக்... கவலையில் பள்ளி மாணவர்கள்!!
அதனைப் பார்த்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியே செல்லும் மாணவர்களும் அதேபோல் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. படிக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறையும் அமைதி காத்து வந்தது. இதனிடையே, பள்ளிக் கல்வித்துறை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்படியொரு சுற்றறிக்கையை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: 1 - 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது? வெளியானது அப்டேட்!!