காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி அந்த பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றார்கள். இந்நிலையில் அதே பகுதியில் செயல்படும் காமாட்சி ஸ்டோர் என்ற கடையில் குட்கா மற்றும் போதை புகையிலை வஸ்துகள் நீண்ட நாட்களாக விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. போதை வஸ்துகள் விற்பனை செய்து வந்ததற்காக அந்தக் கடையின் உரிமையாளர் ராஜா (வயது 36) என்பவர் இதுவரை ஆறு முறை சிறைக்கு சென்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், காமாட்சி ஸ்டோரில் மீண்டும் போதை வஸ்துகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது என்ற ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மதுவிலக்கு அமலாக்கத்துறை உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக அந்தக் கடைக்கு உள்ளே சென்று சோதனை செய்தனர். கடையில் சோதனை செய்தபோது ஒரு சில பாக்கெட்டுகளும் மட்டுமே கிடைத்தது. அதனால் சந்தேகம் அடைந்த மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் தங்கள் தலைக்கு மேலே அமைத்து வைக்கப்பட்டிருந்த தகரத்தை தட்டிப் பார்க்கும்போது அதில் வித்தியாசமான சப்தம் எழும்பவே ஸ்டூல் போட்டு ஏறி பார்த்தனர்.
இதையும் படிங்க: அடமானம் வைத்த பத்திரத்தை தொலைத்த வங்கி... ரூ.2 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு..!


காமாட்சி ஸ்டோரின் உரிமையாளர் ராஜா என்பவர் போதை வஸ்துகளை கடையில் வைத்து விற்பனை செய்தால் தெரிந்துவிடும் என்பதற்காக கடையின் முகப்பில் யாருக்கும் தெரியாதவாறு பரண் அமைத்து அதில் சுமார் 9000 பவுச் போதை வஸ்துகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கடையின் உரிமையாளர் ராஜாவை மதுவிலக்கு அமலாக்கத்துறையினர் கைது செய்து அவர் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 கிலோ 400 கிராம் எடை உள்ள 9035 பௌச் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜாவை ஒரகடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஏழாவது முறையாக புழல் சிறைக்கு ராஜா அனுப்பப்பட்டார்.
இதையும் படிங்க: டிராபிக்கை குறைக்க இதுதான் வழி! அரசுக்கு காவல்துறை வழங்கிய முக்கிய பரிந்துரைகள்