திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுக்கா சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூலைய்யா - லட்சுமி தம்பதியினருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். கணேசணும் அவரது மனைவி சங்கரம்மாளும், கணேஷனும் பூலைய்யா நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். வாழ்வாதாரத்திற்கு கடுமையாக பாதிப்புக்குள்ளான பூலைய்யா, அவரது தந்தை கொம்பையாவின் சொத்துக்களை விற்கும் சூழல் ஏற்பட்டு, அதனை விற்றுள்ளார்.
இந்த விற்பனையின் மூலம் பூலைய்யாவுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைத்துள்ளது. அதனை அவரது உடன் பிறந்த சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டு அவரது ஒரே மகனான கணேசனுக்கும் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட கணேசன் தன்னுடைய மகளுக்கு தங்க நகை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீடு கட்டுவதற்காக கூடுதலாக 10 லட்சம் ரூபாய்க்கு கேட்டு தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் இதனால் இருவருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக தந்தை பூலைய்யா மருத்துவமனை செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்த போது, அங்கு சென்ற கணேசன் பணம் கேட்டு தந்தையை மிரட்டி மீண்டும் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கூலி தொழிலாளி.. மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு..

இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன், தந்தை என்றும் பாராமல் பூலைய்யாவை அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பூலைய்யாவின் மகன் கணேசன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சங்கரம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து விவகாரத்தில் தந்தையை மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியிடம் அத்துமீறல்.. RCB வெற்றியை கொண்டாட அழைத்துச் சென்று கதையை தீர்த்து கட்டிய நண்பர்கள்..