தமிழக சட்டப்பேரவையில் கடந்த 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் மானியக் கோரிக்கைக்கான விவாதம் நடைபெறுகிறது. அதில் முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. அதில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

இதனிடையே கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜுவை கேள்வி கேட்க, சபாநாயகர் அப்பாவு அழைத்தபோது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் உங்களுக்கு ரெக்கமெண்டேஷன் என்று தெரிவித்தார். இதைக் கேட்டு திமுக, அதிமுக எம்.எம்.ஏக்கள் சிரித்தனர். அவர்களை தொடர்ந்து செல்லூர் ராஜுவும் சத்தமாக சிரித்துவிட்டு பேசத் தொடங்கினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? - செல்லூர் ராஜூ ஓபன் டாக்...!

அப்போது, மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மின்சார கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, நீங்கள் கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம் என சொல்ல மாட்டார்கள் என்று தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலையில் நிரம்பியது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மதுரை மேற்கு தொகுதியில் 218 மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 3 புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. தாழ்ந்த நிலையில் உள்ள மின்சார கம்பிகளை மாற்றியமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
இதையும் படிங்க: சரவணனை அமுக்கு..! பிரிந்தே கிடந்தாலும் ஒற்றை ஆளுக்காக இணைந்த அதிமுக மும்மூர்த்திகள்..!