தமிழுக்கே முக்கியத்துவம்..! மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை தூள் தூளாக்கிய அமித் ஷா..!
மத்திய அரசும், பிரதமர் மோடியும் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அமித் ஷாவின் பேச்சு தமிழ் மொழி மீதான அக்கறையை எடுத்துக் காட்டியுள்ளது.
“தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம், இந்தியாவின் பாரம்பரியத்தை வலுப்படுத்துகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது” என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். மேலும் தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை அமித்ஷா ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழர்கள் முட்டாள்களா..? அமித்ஷா...! தெறிக்கவிட்ட ப.சிதம்பரம்..!
அப்போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். பிரதமர் மோடி வந்த பின்னரே சிஐஎஸ்எஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். தமிழ் மொழியை மத்திய அரசு அழிக்க முயற்சி எடுத்துருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அரசும், பிரதமர் மோடியும் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அமித் ஷாவின் பேச்சு தமிழ் மொழி மீதான அக்கறையை எடுத்துக் காட்டியுள்ளது.
அமித்ஷாவின் இத்தகைய பேச்சை கேட்டு மத்திய இணை அமைச்சர் எ,.முருகன் உற்சாகமாக கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, மாநில மொழிகளுக்கு, தமிழுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழில் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியை கையில் எடுத்த அமித்ஷா..! கிரிமினல்களை தெறிக்கவிட முடிவு..!