×
 

நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்... தேர்தல் ஆணையத்துக்குப் பறந்த மனு..!

நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை திரும்ப பெற்று, அக்கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "தமிழகத்தில் ஈரோடு கிழக்கில் நடைபெறும் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக் கூட்டங்களில் பரப்புரையாற்றும் போது கடுமையான மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, திராவிட இயக்கத்தினுடைய ஒப்பற்ற தலைவராக விளங்கும் தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களைக் கொச்சைப்படுத்தி ஏளனமாகப் பேசுவது மற்றும் மதம், ஜாதி, இனம் எனப் பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிராகக் குண்டு கையில் இருப்பதாகவும், அதை இன்னும் வீசவில்லை, என் தலைவன் கொடுத்த அந்தக் குண்டை வீசினால் முற்றிலுமாக பற்றி எரிந்து விடும், அங்கு புல் பூண்டுகூட முளைக்காது, ஒரு கோடி எரிமலையைக் காத்த தீதான் எனது தலைவன். நாங்கள் கொளுத்தி போட்டுட்டு போயிடுவோம், தமிழகமே பற்றி எரியும் என ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சார மேடையில் பேசியுள்ளார். மேலும் கொலை வெறியில் உள்ளதாகவும் ஆவேசமாக மிரட்டி உள்ளார்.



இவரைப் போலவே இவரது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை முருகன் என்பவர் பிரச்சார மேடையைப் பயன்படுத்தி செருப்பை தூக்கி பொதுமக்களிடம் காண்பிக்கிறார். அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசி வருகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி மிரட்டி வருகிறார். இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பெரியதொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.

அமைதியான முறையில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் சீமான். ஆகவே இவரின் நாம் தமிழர் கட்சியினுடைய அங்கீகாரத்தை ரத்து செய்து இவரது இயக்கத்தை தடை செய்ய வேண்டும்” என்று மனுவில் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சீமான் பேசியதை ஆதாரத்தோடு மனுவில் புகழேந்தி இணைத்துள்ளார்.

இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. நீதிமன்றம் போங்க திருமா.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வேற லெவல் ஐடியா.!

இதையும் படிங்க: 'சந்தோஷ் ஒரு ஃபிராடு…' எத்தனை பேரை கூட்டி வந்தாலும் திருப்பி அடிப்போம்..! ஆதாரம் காட்டும் சீமான் தம்பி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share