×
 

ஆஜராக முடியாது என்ன செய்வீர்கள்..? சீமான் சவால் விட்ட பின்னணியில் டெல்லி… ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்..!

போலீசாருக்கும், சீமான் வீட்டு காவலாளிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீமானை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறது காவல்துறை. அவர் ஆஜராகாததால், சம்மனை பெற்றுக் கொள்ளாததால் அவரது வீட்டில் சம்மனை ஒட்டி விட்டு சென்றனர் காவல்துறையினர். அதனை கிழித்து எறிந்ததால்   சீமான் வீட்டு காவலாளியையும், உதயவியாளரையும் கைது செய்துள்ளது காவ்லதுறை. இந்நிலையில் நான் ஆஜராக முடியாது என போலீஸாருக்கு சவால் விடுத்துள்ளார் சீமான். 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தை சீமான் நாடி உள்ளார். சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். அதாவது தன்னை திருமணம செய்து கொள்வதாக கூறி தன்னுடன் சீமான் உறவு கொண்டதாகவும், தற்போது ஏமாற்றி வருவதாகவும் கூறி புகார் அளித்து இருந்தார்.

இதையும் படிங்க: “என்ன பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது”... சீமானை ஒருமையில் விளாசிய விஜயலட்சுமி...! 

இந்த வழக்கு தொடர்பாக சீமான் தரப்பில் முதலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தாலும், விஜயலட்சுமி போதிய ஆதாரங்களை போலீசாரிடம் பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், சீமான் விஷயத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என புகார் பதிவான வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்பேரில் போலீசார், சீமானுக்கு சம்மன் அனுப்பினா். ஆனால் சீமான் வீட்டில் இல்லாத நிலையில் அவரது வீட்டின் முன்பு அதனை ஒட்டினா். ஆனால் ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் சீமான் ஆதரவாளர் ஒருவர் போலீசாரின் சம்மனை கிழித்து எரிந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கும், சீமான் வீட்டு காவலாளிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "நடிகை விஜயலட்சுமி புகார் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை.

ஆகையால், இந்த விவகாரம் தொடர்பாக  உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். போலீசாருக்கு வழக்கை முடிக்க 12 வாரம் கெடு விதிக்கப்பட்டதிற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சீமான் தரப்பில்  என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “இப்ப வா பார்க்கலாம்”... சீமான் வீட்டின் முன்பு போலீஸ் செய்த தரமான சம்பவம்... ஷாக்கான நாதக தம்பிகள்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share