“உன் இந்தியா வேற, என் இந்தியா வேற” - திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்...!
இந்தி யாருக்கு வேணும். வடமாநிலத்தில் போய் வேலை பார்க்கணும்னு நினைக்கிறாங்களோ?, அவங்க படிக்கட்டும்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய திமுக எம்பி கனிமொழி, எதுக்கு இந்தி படிக்கனும். இந்தி யாருக்கு வேணும். வடமாநிலத்தில் போய் வேலை பார்க்கணும்னு நினைக்கிறாங்களோ?, அவங்க படிக்கட்டும். கொரோனா நேரத்துல எத்தனை லட்சக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் உ.பிக்கும், பீகாருக்கும் ஹரியானாவுக்கும் நடந்து போகக்கூடிய துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள் என மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.
எத்தனை லட்சம் பேர் இங்க வேலை செஞ்சுட்டு இருக்காங்க. அங்கே இருக்கக்கூடியவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து இங்க அனுப்புனீங்கன்னா பரவாயில்லை, இங்க வந்து அவங்க கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. நியாயமா பார்த்தா தமிழோ, தெலுங்கோ, மலையாளமோ, கன்னடமோ நீங்க அவங்களுக்கு சொல்லித் தரணும். இங்க வந்து கடைக்கு போகும் பொழுது அவர்கள் எவ்வளவு எவ்வளவு சிரமப்படுறாங்க, ஒரு ஹாஸ்பிடல் போகணும்னா எவ்வளவு சிரமப்படுறாங்க, அந்த பிள்ளைகளை படிக்க வைக்கணும்னா எவ்வளவு கஷ்டப்படுறாங்க இதெல்லாம் நீங்க நினைச்சு பார்க்கிறீங்களா? எங்களுடைய பிள்ளைகள் அங்கே வேலைக்கு வரும்பொழுது அதிகாரிகளாக வருகிறார்கள் ஐடி நிறுவனங்களிலே வேலை செய்வதற்கு வருகிறார்கள். அவங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் போதும்.
நான் இத்தனை வருஷமா இருக்கேன் எனக்கு ஹிந்தி தெரியாது, எனக்கு இந்தி கத்துக்க வேண்டிய அவசியமும் இல்லை. உடனே கேப்பாங்க இந்தி தெரியாதா? நீ இந்தியாலயா? இருக்கேன்னு, “உன் இந்தியா வேற, என் இந்தியா வேற நான் கத்துக்க மாட்டேன் போ”. அதனால் எங்க பிள்ளைங்களுக்கு தேவை என்றால், ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியாற்றவர்கள், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றவர்கள், வேறு மக்களோடு பணியாற்றக் கூடிய சூழ்நிலை வரும் போது அதற்கு தேவையான மொழியைக் கற்றுக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: இருமொழி கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் - ஆளுநர் ரவி
இன்னைக்கு உலகம் முழுவதும் இங்கிருந்து மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாவும் இங்கிருந்து தான் போய் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டுல கல்வியில் முன்னேறி இருக்கிறது. நீங்க இன்னும் 30 வருஷம் பொறுத்து உயர்கல்வியிலே தொடக்கூடிய இலக்கை கனவு கண்டுகொண்டிருக்கிறீர்களே, அதை கடந்து வந்து தமிழ்நாடு அந்த இலக்கை தொட்டுவிட்டோம். அதனால் எங்க பிள்ளைங்க ரெண்டு மொழி படித்தால் போதும். உலகத்தோடு பழகுவதற்கு ஆங்கிலம் கற்றுக் கொண்டால் போதும், நாம் யார் என்பதை புரிந்து கொள்வதற்கு தமிழை தெரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறினார்.
இந்தி கற்கவில்லை என்றால், நான் பணம் கொடுக்க மாட்டேன்னா. நீ 10,000 கோடி கொடுக்கலன்னா கூட பரவாயில்லை. என் பிள்ளைகள் நீ சொல்லுவதற்கு அடிபணிய மாட்டார்கள். இதுதான் நம்முடைய முதலமைச்சர் நமக்கு தந்திருக்கக்கூடிய பிறந்தநாள் செய்தி என்றார்.
இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! கையெடுத்து கும்பிட்ட நடிகர் வடிவேலு...!