×
 

ஈரோடு கிழக்கு, டெல்லி சட்டமன்றம் நாளை வாக்குப்பதிவு... கருத்துக்கணிப்புக்கு தடை

டெல்லி சட்டப்​பேரவை மற்றும் தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்தல் குறித்து தேர்​தலுக்​குப் பிந்தைய கருத்​துக் கணிப்புகளை நாளை காலை முதல் மாலை வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்​துள்ளது.

டெல்​லி​யில் மொத்தம் உள்ள 70 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு நாளை புதன்கிழமை  தேர்தல் நடைபெறுகிறது. மேலும், உத்தர பிரதேசத்​தில் மில்​கிபூர், தமிழகத்​தின் ஈரோடு கிழக்கு சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு இடைத்​தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தேர்​தலுக்​குப் பிந்தைய கருத்​துக் கணிப்புகளை வெளியிட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. 

இந்த நேரத்​தில் தேர்தல் தொடர்பாக கருத்​துக் கணிப்பு நடத்து​வது, செய்திகள் வெளி​யிடு​வது, தொலைக்​காட்​சிகளில் ஒளிபரப்பு செய்வது போன்ற​வற்றுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையும் படிங்க: தொட முடியாத உயரத்தில் திமுக..! வெளியானது ஈரோடு கருத்துக்கணிப்பு

இதுகுறித்து தேர்தல் ஆணை யம்  வெளி​யிட்ட உத்தர​வில், “மக்கள் பிரதி​நி​தித்துவ சட்டம் - 1951, பிரிவு 126 (ஏ) 1-ல்வழங்​கப்​பட்​டுள்ள அதிகாரத்​தின்படி 5-ம் தேதி புதன்​கிழமை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தேர்​தலுக்​குப் பிந்தைய கருத்​துக் கணிப்புகளை வெளியிட தடை விதிக்​கப்​படு​கிறது.

 பத்திரிகை, தொலைக்​காட்சி என எந்த ஊடகத்​தி​லும் கருத்​துக் கணிப்பு வெளியிட கூடாது. டெல்லி மற்றும் இடைத்​தேர்​தல் நடை​பெறும் 2 தொகு​தி​களில் பிப்​ரவரி 8-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறுகிறது.
 

இதையும் படிங்க: டெல்லியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; மரத்தடியில் மாணவிகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்த பிரதமர் மோடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share