வெளிநாடுகளில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..!
வெளிநாடுகளில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு தங்களின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றலாம் எனத் தெரிகிறது.
பெங்களூருவில் அடுத்தவாரம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு மாநாடு நடக்க இருக்கிறது. இதில் ஏபிபிஎஸ் மாநாடும், பெங்களூருவில் உள்ள சென்னாஹல்லியில் மார்ச் 21 முதல் 31ம் தேதிவரை நடக்கிறது. இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்தவிதமான தீர்மானங்களை நிறைவேற்றும் என்பது குறித்து அந்த அமைப்பின் பெயர் வெளியிட விரும்பாத தலைவர்கள் கூறுகையில், வங்கசேதத்தில் ஷேக் ஹசினா அரசு கவிழ்க்கப்பட்டபின் அங்கு இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்த தாக்குதல்களை ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டிப்பதுடன், உலகம் முழுவதும் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து தீர்மானம் வெளியிடலாம், அவர்களை பாதுகாக்க செயல்முறையையும் கொண்டுவரும். சமீபத்தில் கனடாவில் காலிஸ்தீன் தீவிரவாதிகள் இந்து கோயில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டித்துள்ளது.
இதையும் படிங்க: தார்ப்பாய்களால் மூடப்படும் மசூதிகள்.. சச்சரவுகளை தடுக்க உ.பி.அரசு நடவடிக்கை..!
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இரு விஷயங்களுக்கு ஏபிபிஎஸ் தீர்மானம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த விஷயம் என்பது தெரியவில்லை. இந்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டும், நாட்டின் தற்போதுள்ள சூழல், இந்துக்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும் மாநாட்டில் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள், மோகன் பாகவத், தத்தாத்ரேயா ஹோசபல்லே ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பாஜக தலைவர், மூத்த தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், மத்திய அ ரசுக்கு வழிகாட்டவும், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து, முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டுவிழா வருகிறது. இந்த விழாவை எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும், நாடுமுழுவதும் எத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் பேசப்படும். அடுத்த 100 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்படி செயல்பட வேண்டும், நோக்கங்கள், அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
மேலும் கடந்த ஓர் ஆண்டில் செய்யப்பட்ட பணிகள், 100வது ஆண்டுவிழாவில் செய்ய வேண்டிய பணிகள், அடையவேண்டிய இலக்குகள், அடுத்த ஓர் ஆண்டுக்கான இலக்குகள் குறித்தும் பேசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத குடியேறிகளால் அமைப்பு மாறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் குறைந்துள்ளது, முஸ்லிம்கள் அதிகரி்த்துள்ளனர். அருணாச்சலப்பிரதேசத்திலும் அங்குள்ள மக்கள் தொகை, மதம் சார்ந்தோர் நிலை மாறி வருகிறது, வங்கதேசத்தில் இடம் பெயர்வோர் அதிகரித்துள்ளனர். அசாம், மேற்கு வங்கத்தில் என்ன நடந்தது என்பது தெரியும்.
மத்திய அரசு சட்டவிரோத குடியேறிகளை அவர்கள் நாட்டுக்கு திருப்ப அனுப்ப வேண்டியது அவர்கள் பொறுப்பாகும். என்ஆர்எஸ் சட்டம் பல்வேறுமாநிலங்களில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் ஆலோசிக்ககப்பட உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியாவை பாரத் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிரடி.!