×
 

சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..

தெலுங்கானா மாநிலத்தில் சுரங்கப் பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு பொறியாளர் உட்பட எட்டு தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குப் பின்பு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்பத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் டோமலபென்டா அருகே ஸ்ரீசைலம் அணையில் இடதுபுறம் சுரங்க கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (21.02.2025) சுமார் 50 ஊழியர்கள் சுரங்கம் தொண்டும் பணிக்கு சென்றனர். இந்த சுரங்கத்தில் 14 வது கிலோ மீட்டரில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சுரங்கத்திற்குள் சென்று 42 தொழிலாளர்களை மீட்டனர். இருப்பினும்   சுரங்கப்பாதையில் திட்டப்பொறியாளர் மனோஜ் குமார்,  களப்பொறியாளர் ஸ்ரீனிவாஸ், ஜெனரேட்டர் ஆபரேட்டர் சன்னி சிங், தொழில்நுட்ப வல்லுநர் குர்பிரீத் சிங், தொழிலாளர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா எக்ஸ், சந்தோஷ் சாஹு, அஞ்சு சாஹு ஆகிய எட்டு பேர் சுரங்கத்தில் சிக்கி கொண்டனர்.

சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து  நடைபெற்றன. இந்திய ராணுவத்தின் கீழ் ஒரு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. தொழிலாளர்களை மிட்டு வெளியே கொண்டு வந்தவுடன் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 120 பேரும், துணை பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 70 பேரும், சிங்கரேணி நிலக்கரி சுரங்க மீட்புக் குழுவைச் சேர்ந்த 35 பேரும்,  ஹைட்ரா குழுவை சேர்ந்த 15 பேரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தென்னிந்தியாவுக்கு இழப்பு.... முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு தெலங்கானாவிலிருந்து ஆதரவுக் குரல்.!

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொழிலாளர்களை உயிருடன் மீட்க  நடைபெற்ற பணிகள், பலன் இல்லாமல் போனது. ஒருவாரம் நடந்த மீட்பு பணியில் சுரங்கப்பாதையில் சிக்கிய 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுரங்கப்பாதையில் மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் ரேடார்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் உடல்களை அதிகாரிகள் தேடி வந்தனர். இந்நிலையில் சுரங்கப்பாதையில் 5 பேர் உயிருடன்  புதையுண்டும் 3  பேரின் உடல்கள் சுரங்கம் தொண்டும் பணியில் பயன்படுத்திய இயந்திரங்களுக்கு அடியில் சிக்கி இருந்தது ரேடார் மூலம் தெரிந்தது. அவர்களது உடல்கள் மூன்று மீட்டர் ஆழத்தில் மண்ணில் சிக்கியிருப்பதைக் அதிகாரிகள் கண்டறிந்தனர். அப்பகுதி உயிருள்ள கல்லறை போல் இருந்ததாக மீட்புப்குழுவில்  இருந்தவர்கள் கண் கலங்கி தெரிவித்தனர். 

கனரக இயந்திரங்கள் கொண்டு இராணுவம், தேசிய , மாநில பேரிடர் மீட்புப் பணியாளர்கள் மற்றும் ரயில்வே நிபுணர்களுடன், சுரங்கம் துளையிடும் டிபிஎம் இயந்திரங்களை பிளாஸ்மா எரிவாயு கட்டர்கள் உதவியுடன்  இடிபாடுகள் அகற்றப்பட்டது. அதன் பின் தொழிலாளர்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட உள்ளன. அதன் பிறகு சுரங்கத்திற்கு வெளியே உடல்கள் கொண்டு வரப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்படும். பின்னர் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: தெலுங்கு படிச்சே ஆகணும்.. ! 9,10ம் வகுப்பு சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐ.பிக்கும் கட்டாயம் அமல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share