வீணாகிப்போன ராகுல், பிரியங்கா பிரச்சாரம்.! விழி பிதுங்கி நிற்கும் காங்கிரஸ் கட்சி
டெல்லியில் துடைத்து எறியப்பட்ட காங்கிரஸ்: ஒரு இடத்தில்கூட முன்னனி இல்லை
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் இன்னும் ஏற்கவில்லை என்பது தேர்தல் முடிவுகள் வாயிலாகத் தெரியவருகிறது. ஒரு காலத்தில் டெல்லியையும், தேசத்தையும்ஆண்ட பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், டெல்லி மக்களால் துடைத்து எறியப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் இல்லை.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. ஆனால், மக்களவைத் தேர்தல் முடிந்தபின், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு இந்தியா கூட்டணியின் தார்மீக ஒப்பந்ததை மீறியது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்கப்போவதாக அறிவித்தது, ஆம் ஆத்மியும் தனித்து நிற்கப் போவதாக அறிவித்தது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியில் இருந்த சமாஜ்வாதி, உத்தவ்தாக்ரே சிவசேனா, திரிணமூல் காங்கிஸ் உள்ளிட்ட கட்சிகள் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தனித்து செயல்பட்டது.
இதையும் படிங்க: பூஜ்ஜியத்தில் முடிந்த காங்கிரஸின் ராஜ்ஜியம்..! தலைநகரில் காலாவதியான எதிர்க்கட்சி..!
இரு கட்சிகளுக்கு இடையிலான முரண், கூட்டணிக்குள் பூசல், சச்சரவு போன்றவற்றை டெல்லி மக்கள் ஏற்கவில்லை என்பதை தங்களின் வாக்குகள் மூலம் அறிவித்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு கடைசியாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது, அதன்பின் ஏறக்குறைய 15 ஆண்டுகளாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.
டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என பலரும் பிரச்சாரம் செய்தனர், பேரணி சென்றும் மக்கள் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவற்றிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில்தான் சீட் கிடைக்கும் எனத் தெரிவித்தன. சில கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிடும் என்றும் தெரவித்தன.
காங்கிரஸ் கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 11 ஆண்டுகளுக்குப்பின் 8 இடங்களில் வென்று, 24.55 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜக 33 சதவீதமும், ஆம் ஆத்மி 30 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2013ம் ஆண்டு தேர்தலில் பாஜக 31 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை 5 இடங்கள் தேவைப்பட்டது.
அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைப் பெற்று, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால், 49 நாட்களில் அந்த ஆட்சி கவிழ்ந்து. ஆனால், பாஜக கடந்த 1998ம் ஆண்டுக்குப்பின் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
ஆனால், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர், இடையே அரவிந்த்க கேஜ்ரிவால், ஆதிசி, மணிஷ் சிசோடியா முன்னிலை வகித்தாலும் பின்னர் பின்னடைவைச் சந்தித்தனர்.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை வாக்குகள் எண்ணத் தொடங்கியதிலிருந்து அந்த கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து பின்தங்கி வருகிறார்கள். 2020ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 63 வேட்பாளர்களை களமிறக்கியது. ஆனால், காந்திநகர் தொகுதியில் அரவிந்தர் சிங் லவ்லி, கஸ்தூரிபா நகரில் அபிஷேக் தத், பத்லி தொகுதியில் தேவேந்தர் யாதவ் ஆகியோர் மட்டுமே டெபாசிட் பெற்று தங்கள் தொகையைக் காப்பாற்றினர். மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். 2015ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை, 62 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் கட்சியை முடித்து விடுங்கள்..' டெல்லி தோல்வியால் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆவேசம்..!