×
 

1000 ரூபாய் யாருக்கு வேணும்..பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு தான் வேணும்..போராட்டக்களத்தில் கர்ஜித்த சௌமியா அன்புமணி ..!

குற்றவாளிகளை கைது செய்யாமல் போராட்டம் நடத்தும் எங்களை கைது செய்வதில் என்ன நியாயம் என கொந்தளித்துள்ளார் சௌமியா அன்புமணி

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ம.க. மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற, சௌமியா அன்புமணி  உள்ளிட்ட பா.ம.க.வினரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கைது செய்தனர்

கைதுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி  குற்றவாளிகளை கைது செய்யாமல் போராட்டம் நடத்தும் எங்களை கைது செய்வதில் என்ன நியாயம் இன்னும் எத்தனை சின்ன பொண்ணுங்களை காவுவாங்குவாங்க ,அண்ணாநகரில் ஒரு சின்ன பொண்ணு ,அயனாவரத்தில் ஒரு சின்ன பொண்ணு என இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்

பெண்கள் வேண்டுவது பாதுகாப்பை தான் நீங்கள் தரும் 1000 ரூபாய் பணத்தை அல்ல என்றும் முறையா போராட்டம் நடத்த அனுமதி வாங்கி வந்தால் திடீரென அனுமதி மறுத்துள்ளனர் காவல்துறையினர் என்றும் குற்றவாளியை உட்காரவைத்து சாப்பாடு போடுகிறார்கள் இதுவா நீதி இதுவா நியாயம் என போராட்டக்களத்தில்  சௌமியா அன்புமணி கர்ஜித்தார்.

 இதனை அடுத்து போராட்டக்களத்தில் இருந்த சௌமியா அன்புமணி உட்பட  பாமகவினரை  கைது செய்து வாகனங்களில் போலீசார் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
 

 

இதையும் படிங்க: பெண்களுக்கு 1000 ரூபாய் வேண்டாம்; பாதுகாப்பு தான் வேண்டும்... சௌமியா அன்புமணி ஆவேசம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share