மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெள்ளிக்கிழமை ராஜ்ய சபாவில் நடந்த விவாதத்தில் தமிழ்நாட்டின் திமுக அரசாங்கத்தை கடுமையாக சாடினார். திமுக தன்னுடைய ஊழலை மறைப்பதற்காக மொழி அடிப்படையிலான அரசியலை பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
ஹிந்தி திணிப்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், “மொழியின் பெயரில் ஊழலை மறைப்பவர்களுக்கு இதுதான் என் பதில். ஒவ்வொரு மொழியும் நம் கலாச்சாரத்தின் ரத்தினம்” என்றும் மத்திய அரசு தென்னிந்திய மொழிகளுக்கு எதிரானது என்ற கருத்தை அவர் முற்றிலும் நிராகரித்தார்.

நாங்கள் எப்படி இந்திய மொழிகளுக்கு எதிராக இருக்க முடியும்? நான் குஜராத்தைச் சேர்ந்தவன், நிர்மலா ஜி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், எப்படி நாங்கள் எதிராக இருக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விஷம் பரப்பும் தி.மு.க... மொழியின் பெயரால் நாட்டைத் துண்டாடுகிறது- அமித் ஷா ஆவேசம்..!
மோடி அரசு பிராந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக எடுத்த முயற்சிகளை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி இப்போது பல உள்ளூர் மொழிகளில் வழங்கப்படுவதை உதாரணமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்சனையில் ஈடுபடும் திமுகவினருக்கு சவால் விடுத்த அவர், “தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க உங்களுக்கு தைரியம் இல்லை. எங்கள் என்டிஏ அரசு வந்து தமிழ்நாட்டில் இதை சாத்தியமாக்கும்” என்று கூறினார்.

மொழி பெருமை என்ற பெயரில் திமுக “விஷத்தைப் பரப்புகிறது” என்று குற்றம் சாட்டிய அவர், இந்திய மொழிகளை விட “வெளிநாட்டு மொழிகளை” அவர்கள் விரும்புவதாகவும், தமிழ் இளைஞர்கள் நாடு முழுவதும் வாய்ப்புகளைப் பெற தகுதியானவர்கள் என்றும் ஆவேசத்தோடு பேசினார். மொழி விவாதத்தை பிரிவினைக்கான பழைய எச்சம் என்றும் “மொழியின் பெயரில் நாட்டைப் பிரிக்க பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. இனி அது நடக்காது. நாடு முன்னேறிவிட்டது” என்று அவர் கூறினார்.

திமுகவின் “நாடகங்களை” தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் அம்பலப்படுத்துவேன் என்று ஆவேசத்தோடு கூறி அமித்ஷா அவர்களின் நிலைப்பாடு எல்லாம் ஊழலை மறைப்பதற்கான ஒரு முயற்சி என்று கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையின் மூன்று மொழி திட்டம் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.பி.க்கள் ஹிந்தி திணிப்பு குறித்து குற்றம் சாட்டியதை அமித்ஷா ஷா ஆதாரமற்ற குற்றச்சாட்டு என என்று மறுத்தார்.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. 2026 மார்ச் 31 தான் கடைசி.. நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும்.. அமித்ஷா சூளுரை..!