தமிழகத்தின் ராமேஸ்வரம் - இலங்கையின் மன்னார் இடையே மீண்டும் படகு சேவை தொடங்குவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மன்னார் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளாட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அதிபர் அநுர திசாநாயக்கா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவின் ராமேஸ்வரம் - இலங்கையின் மன்னார் இடையே படகு சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்திய பிரதமர் மோடி இலங்கையில் பயணம் மேற்கொண்ட போது மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இந்திய அரசின் உதவியுடன் இலங்கையின் மன்னாரில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மன்னர் பேச்சாளை கடல் பகுதி வளம் மிக்க கடல் பகுதி ஆகும். ஆனால், கடல் வளங்கள் ஒரு சிலரால் சூறையாடப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்.? துணை முதல்வர் உதயநிதி மெசேஜ்.!

இது தொடர்பாக அரசு முறை பயணமாக இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நீண்ட நேரம் பேசினேன். இதற்கு விரைவில் தீர்வு எட்டப்படும். மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இத்திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன" என்று அவர் பேசினார்.
இதையும் படிங்க: வீணான அமெரிக்காவின் முயற்சி... கடைசியில் இந்தியாவிடம் மண்டியிட்ட சீனா..!