மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியை சேர்ந்தவர் சாகிப். வயது 29. இவர் கடந்த ஒன்றாம் தேதி கட்டிட வேலை செய்வதற்காக சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வந்து தங்கி உள்ளார். ஏற்கனவே இந்த மண்டபத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60 நபர்கள் தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் கட்டிட வேலை செய்து வருகின்றனர். அவர்களோடு கட்டிட வேலையை மேற்கொள்வதற்காக மேற்கு வங்கத்திலிருந்து சாகிப் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை நான்கு மணி அளவில் சாகிப் உடன் பணி புரியும் மற்றொரு வட மாநில நபர் திடீரென சாகிப்பை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிக் கொண்ட் இருந்த சாகிப்பை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், சாகிப்பை கத்தியால் குத்திய நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு சென்ட்ரல் பகுதியில் வைத்து மேற்கு வங்க மாநிலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதே ஆன சண்டு பேட்கு என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: இருக்க இடம் கொடுத்தா இப்படியா? நண்பரின் மனைவியிடம் செயின் பறிப்பு.. தங்க இடம் தந்தவருக்கு அதிர்ச்சி..!

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கத்தியால் குத்திய சண்டு பேட்குவை வேலைக்காக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சாகிப் தான் வரவழைத்துள்ளார். அவருடன் வேலையும் கொடுத்துள்ளார். ஆனால் சண்டு பேட்குவுக்கு இந்த வேலை பிடிக்க வில்லை.
அதனால் சாகிப் இடம் தான் ஊருக்கு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் சாகிப் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இங்குதான் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்டு பேட்கு சாகிப்பை கொலை செய்துவிட்டு இங்கிருந்து சொந்த ஊருக்கு சென்று விடலாம் என முடிவு செய்து உள்ளான்.

அதன்படியே சாகிப்பை சண்டு பேட்கு கத்தியால் குத்தியது போலீசாரின விசாரணையில் தெரிய வந்தது இதனை அடுத்து சண்டு பேட்கு மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வேலை வாங்கி கொடுத்து உடன் பணி புரிந்த ஒருவரையே வேலை பிடிக்காத காரணத்தால் கொலை செய்யும் அளவிற்கு துணிந்த வடமாநில இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பிரபல குணச்சித்திர நடிகர் ரவிக்குமார் மறைவு..! அதிர்ச்சியில் திரையுலகம்..!