நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பகல் நேரத்தில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் தற்போது வெயில் வாட்டி வருகிறது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தின் ஆறு இடங்களில் வெப்பநிலை சதம் அடித்தது. ஈரோடு, வேலூர், கரூர், மதுரையில் தலா 101 டிகிரி பாரன்ஹீட்டும், தருமபுரியில் 100 டிகிரி ஃபரான்ஹீட்டும் வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

கோடை வெயில் உடல்நலனுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக நேரம் வெயிலில் இருந்தால் உடல் உஷ்ணம் அதிகரித்து, மயக்கம், வாந்தி, தலைவலி, கால் பிடிப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம். வெயில் காலத்தில் செரிமான கோளாறுகள், நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளும் வர வாய்ப்புண்டு.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று முதல் 22ம் தேதி வரை மழை! வானிலை மையம் கொடுத்த புது அப்டேட்

எனவே, வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நீர்ச்சத்து உள்ள உணவுகளை உண்ண வேண்டும், நமது உடலை டிஹைட்ரேட் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுரை கூறி வருகின்றனர்.

மனிதர்களைப் போல தானே, பறவைகளும், பிற உயிரினங்களும்… கோடை வெயிலால் தண்ணீர் உணவின்றி பல்வேறு உயிரினங்களும் தவிர்த்து வருகின்றன. எனவே கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பறவைகளுக்கு உணவளிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் கொடை அளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன.. புள்ளி விவரங்களைக் காட்டி மு.க.ஸ்டாலின் பேச்சு..!