சிட்டிசன் கன்சூமர் அன்ட் சிவிக் ஆக்ஸந் க்ரூப்(சிஏஜி) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரு சக்கரம் வாகனங்களை இயக்குவோர்களிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம், பயன்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. உலக சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு நாள் 2024, நவம்பரில் கடைபிடிக்கப்பட்டது. அதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்த நிறுவனத்தின் ஆய்வாளர் சவுமியா கண்ணன் கூறப்பட்டிருப்பதாவது.

கடந்த 2018ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டுவரை சாலை விபத்துகளில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, மதுரை,திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவாரூர், கோவை, கடலூர், சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் இரு சக்கரவாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் பயன்பாடு எவ்வாறு இருக்கிறது, தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிக்கு எவ்வாறு கட்டுப்பட்டு நடக்கிறார்கள், தலைக்கவசத்தின் முக்கியப் பங்கை தெரிந்துள்ளார்களா, தலைக்கவசம் கட்டாயம் எனும் உத்தரவை அதிகாரிகள், போலீஸார் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துகிறார்களா என்று ஆய்வு செய்யப்பட்டது.இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நேரத்தில் 1000 பேரிடம் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது.

திருச்சி, மதுரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் இரு சக்கரவாகனங்களை ஓட்டும்போது, தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது.
அதிலும் சென்னை, கடலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம் 25% கீழாக இருக்கிறது.
இந்த ஆய்வில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, கடலூர், திருச்சி, திருவள்ளூர், திருவாருர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் வயதுவந்தோர்களிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம், விதிக்கு கட்டுப்படும் பழக்கம் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.
இதையும் படிங்க: உ.பி. கூட மாறிவிட்டது தமிழகம் நிலை? தலைகவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என அறிவிப்பு..

சென்னை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வயதுவந்தோர்கிடையே, வயதுவந்தோர் வாகனஓட்டிகளியையே தலைக்கவசம் அணிய வேண்டும், விதிக்கு கட்டுப்பட வேண்டும் என்பது 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.
திருநெல்வேலியில் குறிப்பாக வண்ணாரப்பேட்டை, நெல்லையப்பர் சாலை, சென்னை சில்ஸ் சந்திப்பு பகுதிகளில் இரு சக்கரவாகன ஓட்டிகளிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம் 75 சதவீதம் வரை இருக்கிறது. போக்குவரத்து போலீஸாரின் கண்காணிப்பு, சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துதல், அபராதம் விதித்தல் போன்றவற்றால் தலைக்கவசம் அணியும் பழக்கம் அதிகமாக இருக்கிறது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக வயதுவந்த இளைஞர்களிடையே தலைக்கவசம் அணியும் பழக்கம் மிகக்குறைவாக இருக்கிறது. வயதுவந்த இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குவதைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு, சிறுவர்களும் அதேபோன்று தலைக்கவசம் இன்றி வாகனங்களை இயக்குகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.

மூத்தஆய்வாளர் திவ்யா செந்தில் கூறுகையில் “ இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் எவ்வளவு முக்கியம், உயிர்காக்கும் கவசமாக இருக்கிறது என்பதை பெற்றோர்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை, அதை புறந்தள்ளி வருகிறார்கள், தங்கள் குழந்தைகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறத்தாமல் இருப்பது வியப்பாக இல்லை” எனத் தெரிவித்தார்
அதேசமயம், சென்னை, கோவை, நெல்லை, சேலம் மாவட்டங்களில் உள்ள வயதுவந்தோர், இளைஞர்களிடையே தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு, அதை அணிந்து வாகனம் ஓட்டுவது, விதிகளை மதித்து நடப்பது அதிகமாக இருக்கிறது. சேலம் மற்றும் நெல்லை மாவட்ட சிறுவர்களிடையே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டும் விழிப்புணர்வும், விதிகளை கடைப்பிடித்து நடப்பதும் அதிகமாக இருக்கிறது.
சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது, விதிகளை தீவிரமாக செயல்படுத்துவது மட்டும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பழக்கவழக்கத்தில் நிலையான மாற்றத்தை கொண்டுவர முடியாது. கல்விரீதியான விழிப்புணர்வு, தலைக்கவசத்தின் முக்கியத்துவம், பிரச்சாரம், விதிகளை மிக்கடுமையாக செயல்படுத்துதல் ஆகியவை மூலம் தலைக்கவசம் அணியும் பழக்கத்தை அதிகப்படுத்தலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு மறுத்த, 20 வயது மகள் சுட்டுக்கொலை: போலீஸ், பஞ்சாயத்தார் முன்னிலையில் தந்தை வெறிச் செயல்...