15 லட்சம் ரூபாய் லஞ்சம்.. நெடுஞ்சாலை துறை மேலாளர் கைது.. அதிரடி காட்டிய சிபிஐ..
தனியார் நிறுவன பொது மேலாளரிடமிருந்து லஞ்சம் பெற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொது மேலாளர் உட்பட நான்கு பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்பான ஒப்பந்த பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து ஒப்பந்த பணிகள் தொடர்பாக தனியார் நிறுவன பொது மேலாளரிடம் தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் ராம் பிரீத் 15 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் பணிகள் குறித்தான ஒப்புதல்களில் கையெழுத்து கையெழுத்து இடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கசிந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், தனியார் நிதி மேலாளர் 15 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணியே பொது மேலாளரிடம் கொடுத்தபோது இருவரையும் கையும் களவுமாக சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ.. சுத்துப்போட்ட போலீஸ்.. குளத்தில் குதித்து தப்ப முயற்சி..!
இந்த நிலையில் லஞ்சம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மூத்த அதிகாரிகள் உட்பட 12 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தேசிய நெடுஞ்சாலையை ஆணைய பொது மேலாளர் பஸ்வனுக்கு சொந்தமான பாட்னா, முசாபர், சமஸ்திபூர், பெகுசராய் ராஞ்சி, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் 10 லட்சம் ரூபாயும் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் போல் சிபிஐ போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் துறை ரீதியாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
இதையும் படிங்க: விபத்து வழக்கில் FIR கொடுக்க லஞ்சம் கேட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்..!