விபத்து வழக்கில் FIR கொடுக்க லஞ்சம் கேட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்..!
புதுச்சேரி அருகே விபத்து வழக்கில் எஃப்.ஐ.ஆர் நகல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அருகே கடப்பேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ், குணசேகரன், செந்தில் ஆகிய மூவரும் கடந்த 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் சரண்ராஜின் இருசக்கர வாகனத்தில் சேதாரப்பட்டு நோக்கி சென்றுள்ளனர்.
இதில் துத்திபட்டு கிராமத்து அருகில் வளைவு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரி மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் உடல்களை மீட்டு உடர்குறாய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சரண்ராஜின் சகோதரர் முத்து சில வாரங்களுக்கு முன்பு 7 இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் எஃப்ஐஆர் நகல் குறித்து கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: உதவியாளர் வைத்து லஞ்சம் பெற்ற மாஜி மாவட்ட வருவாய் அதிகாரி.. அதிரடி காட்டிய நீதிமன்றம்!
என்ன நிலையில் உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கர் எஃப் ஐ ஆர் நகல் கொடுப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை மொத்த மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் டிஜிபி ஷாலினி சிங் உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கர் மீது தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆவணங்களை திருப்பித் தர ரூ.5000 கேட்ட அதிகாரிகள்.. பிளான் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்..