தேதி குறிச்சாச்சு.. 2026 மார்ச் 31 தான் கடைசி.. நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும்.. அமித்ஷா சூளுரை..!
சத்தீஸ்கரில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிசூட்டில் 30 நக்சல்கள் கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்பு படைவீரர் வீர மரணம் அடைந்தார். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாடு நக்சலைட் இல்லாத நாடாக மாறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
எனப்படும் பிஜப்பூர், தண்டேவாடா, கன்கெர், நாராயணன்புர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களின் வனப்பகுதிகளுக்குள் ஏராளமான நக்சலைட்டுகள் பதுங்கி இருந்தபடி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் மற்றும் தண்டேவாடா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பீஜப்பூர் மாவட்டம், கங்கலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப் பகுதியில் காலை 7:00 மணிக்கு மாநில காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் படை (டிஆர்எஃப்) மற்றும் மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார் இணைந்த கூட்டுக்குழு கங்கலூர் பகுதியில் தீவிர நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்றபோது பதுங்கி இருந்த நக்சல்கள் முதலில் துப்பாக்கியால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் போலீஸ்காரர் வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதையும் படிங்க: எனக்குப் பயமா..? நாடாளுமன்றத்தில் கொதித்தெழுந்த அமித் ஷா..!
உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பிலும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. காலை தொடங்கிய இந்த துப்பாக்கிச்சூடு நடவடிக்கை பிற்பகல் வரை நீடித்து மாலை வரை தொடர்ந்தது. இறுதியில், தாக்குப்பிடிக்க முடியாமல் சில நக்சலைட்டுகள் அடர்ந்த காட்டுக்குள் ஓடி விட்டனர். அதன்பின், அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தபோது, 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு கிடந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் அங்கிருந்து துப்பாக்கிகள், ஆயதங்கள், ஏராளமான வெடிப்பொருட்கள் கொண்ட ஆயுத குவியல் கைப்பற்றப்பட்டது. இந்த மோதலில் டிஆர்எஃப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
இதுபோல, சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் நாராயண்பூர் எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் டிஆர்எஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் நேற்று காலையில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டு படையினர் - நக்சலைட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு கடும் மோதலுக்கு பிறகு 4 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், தானியங்கி ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் கான்கெர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்திரா கல்யாண் கூறினார். என்கவுன்டர் நடந்த இரண்டு இடங்களிலும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நீடித்து வருகின்றது.
ஏற்கனவே, பிஜப்பூரின் இந்திராவதி தேசிய பூங்கா அருகே, கடந்த மாதம் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட நிலையில், நேற்றும் 30 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த என்கவுன்டர் சம்பவங்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூர், கான்கர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் மட்டும் 97 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த பலரை கொன்றதன் மூலம் இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான பயணத்தில் பாதுகாப்பு படைகள் மற்றொரு பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இந்த இரண்டு என்கவுன்டர் சம்பவங்கள் மூலமாக நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான முன்னேற்றத்தில் பாதுகாப்பு படையினர் மற்றொரு பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். பிரதமர் மோடி அரசு நக்சலைட்டுக்களுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகின்றது. மேலும் சரண் அடைவது முதல் தேசிய நீரோட்டத்தில் இணைவது வரை அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. சரண் அடைவதற்கு தயாராக இல்லாத நக்சல்களுக்கு எதிராக சிறிதும் சகிப்பு தன்மை காட்டப்படாது. அதில் அரசு உறுதியாக உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாடு நக்சலைட் இல்லாத நாடாக மாறும் என மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்னார்.
இதையும் படிங்க: காந்தி, நேருவையே ஓடவிட்டோம்... தமிழ் நாட்டில் மோடி- அமித்ஷாவை விட்டுவிடுவோமா..? -ஆ.ராசா சவால்..!