×
 

அரசு பேருந்து - கார் மோதி விபத்து.. 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த பாண்டிச்சேரி - பெங்களூரு நெடுஞ்சாலையில், அதிகாலை பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.

இந்த நிலையில், அதிவேகமாக சென்ற  அரசு பேருந்தும், காரும் கீழ்பெண்ணாத்தூர் அருகே சோ.காட்டுக்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், கார் அப்பளம் போல் நொருங்கியதில், காருக்குள்ளே இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் அரங்கேறிய கோர விபத்து.. 1 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி..!

தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது பாண்டிச்சேரியைச் சேர்ந்த சைலேஷ், சதீஷ்குமார், ஸ்டாலின், சரோப் ஆகியோர் என்பதும் இவர்கள் நான்கு பேரும் லாரி உரிமையாளர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. கணவன், மனைவி பலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share