லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. கணவன், மனைவி பலி..!
சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் வேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் கணவன், மனைவி உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த நாச்சியார் என்பவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனையை நோக்கி சென்றுக் கொண்டு இருந்தனர். ஆம்புலன்ஸ் வேனில் முருகன், கல்யாணி மற்றும் அவர்களது மகள் பவிதா ஆகியோர் இருந்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனத்தை விஜய் மற்றும் கவியரசன் ஆகிய இரண்டு பேர் மாற்றி மாற்றி இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுநர் கவியரசு ஆம்புலன்சை இயக்கிய போது பல்லடம் அடுத்த பெரும்பாலி பகுதியை ஆம்புலன்ஸ் கடந்துள்ளது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் பலமாக மோதியுள்ளது.
இதையும் படிங்க: துக்க வீடான திருமண வீடு.. மகள் திருமணத்தன்று பலியான தாய்.. கதறி துடித்த மணப்பெண்..
இந்த விபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உடன் சென்ற அவரது மனைவி கல்யாணி படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்த முருகனின் மகள் பவிதா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விஜய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே இந்த விபத்து காரணமாக வாகன இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் தவித்த ஓட்டுநர் கவியரசு தீயணைப்புத் துறை அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து காயம் அடைந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டிராக்டர் - லாரி மோதி விபத்து.. இருவர் பலி: சேலத்தில் அரங்கேறிய சோகம்..!