காமாக்கிய விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து - 7 பயணிகள் படுகாயம்
ஒடிசாவில் காமாக்யா அதிவேக விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரு - காமாக்யா இடையே இயக்கப்படும் காமாக்யா ஏசி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அசாம் மாநிலம், குவஹாத்தி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் கிழக்கு கடற்கரை ரயில்வே பிரிவில் உள்ள நெர்குந்தி நிலையம் அருகே சென்றபோது, திடீரென ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் மற்ற ரயில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகள் உதயம்..அரசாணை வெளியீடு..
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் ரயில்வே போலீசார், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து விபத்துக்கு உள்ளான ரயிலில் சிக்கித் தவித்த பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது
இதையும் படிங்க: வெயிலின் தாக்கம்.. நீலகிரி வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ