தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகள் உதயம்..அரசாணை வெளியீடு..
தமிழ்நாட்டில் புதிதாக 7 நகராட்சிகள் உதயமாகியுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையை விரிவுப்படுத்தும் நோக்கில், ஏழு புதிய நகராட்சிகள் உதயமாகியுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி மற்றும் பெருந்துறை ஆகிய ஏழு புதிய நகராட்சி உருவாக உள்ளன” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, 10.08.2024 அன்று திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள், அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டு வரி செலுத்தாததால் ஆத்திரம்.. பள்ளம் தோண்டி பழி வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள்!
இதையும் படிங்க: வெயிலின் தாக்கம்.. நீலகிரி வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ